ஆந்தைத் தும்பி
Owlflies புதைப்படிவ காலம்:Late Jurassic–Recent | |
---|---|
![]() | |
Male Libelloides coccajus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia |
தொகுதி: | Arthropoda |
வகுப்பு: | Insecta |
வரிசை: | Neuroptera |
துணைவரிசை: | Myrmeleontiformia |
பெருங்குடும்பம்: | Myrmeleontoidea |
குடும்பம்: | Ascalaphidae Rambur, 1842 |
Subfamilies | |
and see text |
ஆந்தைத் தும்பி தட்டான்களை ஒத்த அமைப்பைக் கொண்டு இருந்தாலும் பூச்சிகள் இனத்தைச் சார்ந்தவை. இவைகளின் கண்கள் மிகப் பெரிதாகவும் உணர்கொம்புகள் பலமுள்ளதாகவும் காணப்படும். இவைகள் neuropterans Ascalaphidae;குடும்பத்தைச் சார்ந்தவை. இவைகள் உண்மை ஈக்கள், மற்றும் தட்டான் பூச்சிகளிலிருந்து வேறுபட்டவை. இவைகள் ஐந்து செ.மீ வளரக்கூடியவை
வாழும் சூழல்[தொகு]
வளர்ந்த ஆந்தைத் தும்பிகள் மற்ற பூச்சியினங்களை உண்ணுபவை. சில ஆந்தைகள் தங்கள் எதிரிகளை விரட்ட தங்கள் உடலிலிருந்து ஒருவகையான துர்நாற்றத்தை வீசக் கூடியவை. அநேக பூச்சிகள் இருட்டும் போதும் விடியும் போதும் மிக சுறுசுறுப்பாக அங்கும் அங்கும் பறக்கும். இவை பகல் வேளைகளில் மரங்களின் இலைகளிலும் தண்டுகளிலும் தங்கள் உடம்போடு உடம்பாக ஒட்டிக் கொள்ளும். சில வகைப் பூச்சிகள் தங்கள் வயிற்றுப் பாகத்தை மேல் நோக்கி வைத்து தங்களி உடைந்த குச்சி அல்லது கிளை போலக் காட்டிக் கொள்ளும்.இவைகளின் அந்தி வேளை உணவு தேடும் பழக்கங்களும், பெரிய வட்டமான ஆந்தை போன்ற கண்கள்மே இவைகளுக்கு இந்த பெயரை பெற்றுத் தந்துள்ளது.