ஆந்திரேய் இலிந்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆந்திரேய் இலிந்தே
Andrei Linde
Andrei Linde 2018.jpg
2018 இல் இலிந்தே
பிறப்புமார்ச்சு 2, 1948 (1948-03-02) (அகவை 73)
மாஸ்கோ, உருசியா,
சோவியத் ஒன்றியம்
துறைகோட்பாட்டு இயற்பியல்
அண்டக் கட்டமைப்பியல்
பணியிடங்கள்இலேபெதேவ் இயற்பியல் கல்வி நிலையம்
ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்தாவீது கிர்சினித்சு
அறியப்படுவதுஅண்ட உப்பல்
விருதுகள்2018  காமோவ் பரிசு
2014  காவ்லி பரிசு
2012  அடிப்படை இயற்பியல் பரிசு
2004  குரூபர் பரிசு
2002  திராக் பதக்கம்
2002 ஆசுக்கர் கிளெயின் பதக்கம்
துணைவர்ரெனாத்தா காலோசு

ஆந்திரேய் திமித்ரியேவிச் இலிந்தே (Andrei Dmitriyevich Linde; (உருசியம்: Андре́й Дми́триевич Ли́нде, அந்திரேய் திமீத்திரியெவிச் லீந்தே; பிறப்பு: மார்ச்சு 2, 1948) ஓர் உருசிய-அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் சுடேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அரால்டு டிரேப் ஃபிரிலிசு இயற்பியல் அறக்கட்டளைப் பேராசிரியர் ஆவார். இலிந்தே அண்ட உப்பல் கோட்பாட்டளர்களில் ஒருவர். இவர் தொடர்து விரிவடைந்துனுப்பிடும் பல்லண்டக் கோட்பாளரும் ஆவார். இவர் தன் அறிவியல் இளவல் பட்ட்த்தை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பெற்றார்.இவர் மாஸ்கோ இலெபிதேவ் இயற்பியல் நிறுவனத்தில் 1975 இல் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1989 இல் இருந்து ஐரோப்பிய அணுக்கரு ஆராய்ச்சி நிறுவனத்தில் (செர்ன்) பணிபுரிந்தார். பின்னர் இவர் 1990 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சுடேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். இவர் அண்ட உப்பல் கோட்பாட்டுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2002 இல் இவர் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆலன் குத், பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் பவுல் சுடீன்கார்த்ஆகிய இருவருடன் இணைந்து டிரேக் பதக்கத்தைப் பெற்றார். இவர் 2004 இல் ஆலன் குத்துடன் இணைந்து உப்பல் அண்டக் கோட்பாட்டு உருவாக்கத்துக்காகக் குரூபர் அண்டவியல் பரிசைப் பெற்றார். இவர் 2012 இல், ஆலன் குத்துடன் இணைந்து முதலடிப்படை அறிவியல் பரிசைப் பெற்றார். அண்ட உப்பல் கோட்பாட்டை முன்னோடியாக உருவாக்கியதற்காகக் காவ்லி வானியற்பியல் பரிசை 2014 இல் ஆலன் குத்துடனும் அலெக்சிய் சுதாரோபின்சுகியுடனும் இணைந்து பெற்றார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இலிந்தே இரேனதா கல்லொழ்சுவை மணந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Renata Kallosh". UCLA. பார்த்த நாள் March 17, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரேய்_இலிந்தே&oldid=3094992" இருந்து மீள்விக்கப்பட்டது