ஆந்திரேயசு அவுசான்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திரேயசு அவுசான்சு
ஆந்திரேயசு அவுசான்சு
பிறப்பு(1871-04-04)ஏப்ரல் 4, 1871
பிலாவினு பற்று, உருசியப் பேரரசு
(இன்றைய கிளிந்தைன் பற்று  லாத்வியா)
இறப்புமார்ச்சு 23, 1953(1953-03-23) (அகவை 81)
ஸ்டொக்போர்ட், வார்ப்புரு:GRB
சார்புஉருசியப் பேரரசு
சோவியத் ஒன்றியம்
லாத்வியா
சேவை/கிளைஇராணுவம்
தரம்படைத்தளபதி
போர்கள்/யுத்தங்கள்உருசிய-யப்பானியப் போர்
முதல் உலகப் போர்
உருசிய உள்நாட்டுப் போர்
வேறு செயற்பாடுகள்விரிவுரையாளர், வெளியீட்டாளர்

ஆந்திரேயசு அவுசான்சு (Andrejs Auzāns, 1871 – 1953) ஓர் இலாத்துவியப் படைத் தளபதியும் நிலக்கிடப்பியலாளரும் ஆவார்.

அவுசான்சு உருசியப் பேரரசு இராணுவத்தில் படைத்தளபதியாவார். 7 ஆம் பவுசுகா துப்பாக்கிப் படைப் பிரிவின் கட்டளையாளராகவும் 2 ஆம் துப்பாக்கி வீர்ர் அணியில் கட்டளையாளராகவும் பங்கேற்றதற்காகவும் பெயர்பெற்றவர். மேலும் இவர் செம்படையின் உருசியப் படைத்தளபதிப்பணியில் நிலக்கிடக்கையியல் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[1]

இளம்பருவம்[தொகு]

இவர் 1872 ஏப்பிரல் 4 இல் போர்மனி ஓம்சுடெடில் உள்ள பிளவினாசு நகராட்சி சார்ந்த பிளவினு பாரிழ்சில் பிறந்தார். இவர் கொக்னேசியில் இருந்த பாரிழ்சுப் பள்ளியிலும் வியத்தால்வா பாரிழ்சுப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இவர் 1893 இல் நில அளக்கையராக உருசிய நகரான பிசுகோவில் பட்டம் பெற்றார்.

முதல் உலகப் போருக்கு முன்[தொகு]

பட்டம் முடித்த்தும் அவுசான்சு இராணுவ நிலக்கிடப்பியல் பள்ளியில் சேர்ந்து 1895 இல் அத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பின்லாந்தில் படைத்துறையின் துணைத்தலைவராகப் பணிபுரிந்தார்.இவர் 1896 முதல் புனித பீட்டர்சு பர்கில் இருந்த நிலக்கிடப்பியல் அலகில் அலுவலராகப் பணிபுரிந்தார்.

இவர் 1900இல் உருசியப் படைத்தளபதிப்பண் கல்வ்க்கழகத்தில் சேர்ந்து 1903இல் இராணுவத் தலைவராகப் பட்டம் பெற்றார்.

அவுசான்சு 1905 இல் நிலவடிவ அளத்தலிலும் வானியலிலும் நடைமுறைப் பாடங்களைப் புல்கோவோ வான்காணகத்தில் பயின்றதும், இவர் உருசியத் தளபதிப்பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவர் உருசிய - ஜப்பானியப் போரில் பங்கேற்றார்.

பிறகு எசுத்தோனியா, பின்லாந்து, மஞ்சூரியா, துருக்குமேனித்தான் ஆகிய இடங்களில் அலுவலராகவும் நிலக்கிடப்பியலாளராகவும் பணி செய்துள்ளார்.

இவர் 1907இல் படைத்துறைத் துணைத் தலைவரானார்.

இவர் 1907முதல் 1910 வரையில் வானியலாளராகப் பணிபுரிந்தார்.

இவர் 1911இல் படைத்துறைத் தலைவரானார்.

இவர் 1911முதல் 1916வரையில் தாழ்சுகண்ட் வான்கானக இயக்குநராக விளங்கினார்.

முதல் உலகப் போர்[தொகு]

இலத்துவியத் துப்பாக்கிப்படை 1915இல் உருவாக்கப்பட்ட்து. அப்போது அவுசான்சு உசுபெகித்தானில் இருந்தார். இவர் 1916இல் இலத்துவியாவுக்கு மீண்டு அப்படைப்பிரிவில் சேர்ந்தார். பிறகு இறுதியாக 7ஆம் பவுசுகா துப்பாக்கீப் படைப்பிரிவி கட்டளையாளராக உயர்ந்தார். மேலும் பெயர்பெற்ற கிறித்துமசுப் போர்களுக்கு முன்பே இவர் 2ஆம் இலத்துவியத் துப்பாக்கிப் படையின் கட்டளையாளராகப் பதவி அமர்த்தப்பட்டார். இவர் 1917இல் [[படை மேலராகவும் உருசியப் படைத்தளபதிப்பணிசார் நிலக்கிடப்பியல் பிரிவிந்தலைவராகவும் பதவி பெற்றார். இவர் இப்பதவியில் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு 1920 வரையில் இருந்தார். இவர் 1921இல் சோவியத் இராணுவக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

இலத்துவியக் குடியரசில் வாழ்க்கை[தொகு]

அவுசான்சு 1923 இல் இலத்துவியாக்குத் திரும்பி இலத்துவியப் படையில் சேர்ந்தார். இவர் பொதுமேலர் பதவி வரை பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் இலத்துவியப் போர் அமைச்சகத்தின் இராணுவ மன்றத்திலும் உறுப்பினரானார்.

இவர் 1927 இல் இலத்துவிய இராணுவத் தலைமையக நிலக்கிடப்பியல் பிரிவின் தலைவரானார். மேலும் இலத்துவிய இராணுவக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். துப்பாக்கியாளர் கழகத்தின் தலைவராவார். இவர் 1933இல் முழு ஓய்வு அகவையை எட்டியதும் ஓய்வுபெற்றார். பிற்காலத்தில் இவர் நிலக்கிடப்பியல் பற்றியும் இராணுவ வரலாறு பற்றியும் பல நூல்களை எழுதி வெளியிட்டார்.[2]

இறுதி ஆண்டுகள்[தொகு]

1940 இல் இலத்துவியாவைச் சோவியத் கைப்பற்றும்போதும் பிறகும் இவர் அடக்கப்படவில்லை. என்றாலும் இவர் சோவியத்துடனோ நாசிப் படைகளுடனோ ஒத்துழைக்காமல் நடுநிலை வகித்தார். இவர் 1944 இலையுதிர்காலத்தில் குடும்பத்துடன் செருமனிக்குப் புலம்பெயர்ந்தார். பிறகு 1948 இல் பிரித்தானியப் பெருநாட்டில் வாழலானார்.. இவர் 1953 மார்ச் 23 இல் பிரித்தானியப் பெருநாட்டு சுட்டாக்பொர்ட்டில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://forum.valka.cz/viewtopic.php/title/Auzans-Andrejs/t/64684
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-20. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரேயசு_அவுசான்சு&oldid=3542660" இலிருந்து மீள்விக்கப்பட்டது