ஆந்திரியா துப்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆந்திரியா கே. துப்ரீ
Andrea K. Dupree
Dr. Andrea K. Dupree, Harvard-Smithsonian Center for Astrophysics, at the cassegrain focus of the 4-m Mayall telescope of the National Optical Astronomy Observatories, Kitt Peak, AZ..jpeg
முனைவர் ஆந்திரியா கே. துப்ரீ, ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையம், காசேகிரைன் குவியம் 4-மீ மேயாள் தொலைநோக்கி, தேசிய ஒளியியல் வானியல் காணகங்கள், கிட் பீக், அரிசோனா
பிறப்பு1939
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்வெல்லெசுலி கல்லூரி, 1960, ஆர்வார்டு பல்கலைக்கழகம், 1968
ஆய்வேடுசூரிய ஒளிமுகட்டின் உமிழ்வு வரிகள் பகுப்பாய்வு (1968)

ஆந்திரியா துப்ரீ (Andrea Dupree) ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் முதுநிலை வானியற்பியலாளர் ஆவார்.[1] இவர் அமெரிக்க வானியற்பியல்கழகத்தின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். மேலும் இவர் ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தின் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். முனைவர் துப்ரீ Head of the சூரியன், விண்மீன், கோளியற் புலக் கோட்டத் தலைவராகப் பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.[1]

கல்வியும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

துப்ரீ வெல்லெசுலி கல்லூரியில் சேர்ந்து 1956 இல் கலையிளவல் பட்டம் பெற்றார். இவர் வானியலிலும் புவியியலிலும் ஆர்வம் கொண்டிருந்த்தால் அறிவியல் பிரிவுக்கு மாற விரும்பினார். இவர் தன் 2007 ஆண்டு நேர்காணலில் , " வாலுக்குப் பதில் தலை விழுந்தால் நான் புவியியலாளராவேன்" எனக் கூறியுள்ளார்.[2]வெல்லெசுலியில் தன் இளவல் பட்டப்படிப்பு முடித்த்தும், துப்ரீ சிறிதுகாலம் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளார். பிறகு 1961 இல் இராடுகிளிப் கல்லூரியில் பட்டமேற்படிப்பில் சேர்ந்தார். இக்கல்லூரி 1963 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டது. துப்ரி ஆர்வார்டில் வானியற்பியலில் 1968 இல் முனைவர் பட்டம் பெற்றார்.[2] இவரது ஆய்வுரையின் தலைப்பு சூரிய ஒளிமுகட்டின் உமிழ்வு வரிகள் பகுப்பாய்வு என்பதாகும்.[3]

துப்ரீ 1968 முதல் ஆர்வார்டு-சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் வானியற்பியலாளராக பணிபுரிந்து, 1980 இல் வானியற்பியல் மையத்தின் முதல் இளைய பெண் இணை இயக்குநரானார். இவர் 1996முதல் 1998 வரை அமெரிக்க வானியல் கழகத் தலைவராக விளங்கினார்.[4] துப்ரீ விண்மீன் இயற்பியலில் பன்னாட்டுத் தகைமையைப் பெற்றவர். இவர் சூரியனைப் போன்ற குளிர்வான விண்மீன்களை ஆய்வதில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டார்.

துப்ரீ 2007 இல் அமெரிக்க இயற்பியல் நிறுவனத்தில் வாய்மொழி வரலாறொன்றைப் பதிவு செய்துள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dupree". Harvard-Smithsonian Center for Astrophysics.
  2. 2.0 2.1 "Andrea Dupree". American Institute of Physics (2015-01-23).
  3. Dupree, Andrea Kundsin (1968). Analysis of Emission Lines from the Solar Corona. Bibcode: 1968PhDT.........3D. 
  4. "Past Officers and Trustees".
  5. "Andrea Dupree" (en) (2015-01-23).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரியா_துப்ரீ&oldid=3019428" இருந்து மீள்விக்கப்பட்டது