உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திரப் பிரதேச நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திரப் பிரதேச நாள் (Andhra Pradesh Day) 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று இந்தியாவிலுள்ள இணைக்கப்பட்ட ஆந்திரா மற்றும் ஐதராபாத்து மாநிலங்களில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையிலும், அந்த மாநிலத்தின் வரலாறு மற்றும் பயணத்தை பிரதிபலிக்கும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது.

1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக ஆந்திரப் பிரதேசம் உருவானது. மொழியியல் அடிப்படையில் முதலில் உருவாக்கப்பட்ட மாநிலம் இதுவே ஆகும். மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு மொழியாகும்.

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆந்திரப்பிரதேச மாநிலம், தெற்கே தமிழ்நாடு, தென்மேற்கு மற்றும் மேற்கில் கர்நாடகா, வடமேற்கு மற்றும் வடக்கே தெலுங்கானா மற்றும் வடகிழக்கில் ஒடிசா ஆகிய மாநிலங்களால் சூழப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் பரப்பளவில் நாட்டின் ஏழாவது பெரிய மாநிலமாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Andhra Pradesh Formation Day: How Potti Sreeramulu's Fast Unto Death Led To Formation Of State". ABP Live. 21 October 2023. Retrieved 9 November 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரப்_பிரதேச_நாள்&oldid=4327759" இலிருந்து மீள்விக்கப்பட்டது