ஆந்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகையியல்
ஆந்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகை (Demographics of Andhra Pradesh) தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் மொத்தம் உள்ள 26 மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகையாகும். இம்மக்கள் தொகை கடலோர ஆந்திரா, உத்தராந்திரா மற்றும் ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. மாநிலத்தின் தலைநகரம் அமராவதி ஆகும்.
இம்மாநிலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பல ஆண்டுகளாக மக்கள்தொகையின் அடிப்படையில் சீராக வளர்ந்துள்ளது. இம்மாநிலம் தமிழ்நாடு, ஒடிசா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைகளை இணைக்கிறது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் (2011) அடிப்படையில் இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 49,471,555 ஆகும்.[1] பாலின விகிதம் 2001 ஆம் ஆண்டில் 992 ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 978 என்பதை விட அதிகமாகும்.
160 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் மக்கள் தொகை அடர்த்தி 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 277 ஆக இருந்த நிலையில் 2011 ஆம் ஆண்டில் 308 ஆக உயர்ந்துள்ளது, இது தேசிய சராசரியை விட குறைவாகும்.[2] 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட 14.59 என்ற அளவுக்கு எதிராக மக்கள்தொகையின் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சி விகிதம் 11.10 ஆகும்.[3] 2001-2011 காலத்தில் தசாப்த வளர்ச்சி விகிதம் 3.49 ஆக குறைந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் கல்வியறிவு விகிதம் 2011 ஆம் ஆண்டில் 6.47% ஆக இருந்தது. மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு ஆகும்.
மதம்
[தொகு]| மதம் | 2001 (ஆந்திரப் பிரதேசம் (1956–2014)) [4] | 2011 (ஆந்திரப் பிரதேசம்) [5][4] | ||
|---|---|---|---|---|
| மக்கள்தொகை | (%) | மக்கள்தொகை | (%) | |
| இந்து மதம் | 67,836,652 | 89.01 | 44,875,698 | 88.46 |
| இசுலாமிய மதம் | 6,986,856 | 9.17 | 3,617,713 | 9.55 |
| கிறித்துவ மதம் | 1,181,917 | 1.55 | 682,660 | 1.34 |
| சமண மதம் | 41,846 | 0.05 | 27,159 | 0.06 |
| சீக்கிய மதம் | 30,998 | 0.04 | 9,904 | 0.05 |
| புத்த மதம் | 32,037 | 0.04 | 4,139 | 0.04 |
| மற்றவை | 4,768 | 0.01 | 4,125 | 0.01 |
| குறிப்பிடப்படாதவை | n/a | n/a | 165,401 | 0.48 |
| மொத்தம் | 76,210,007 | 100% | 49,386,799 | 100% |
மொழி
[தொகு]
தெலுங்கு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Andhra Pradesh Profile" (PDF). Censusindia.gov.in. Retrieved 20 November 2014.
- ↑ "Census of India : Provisional Population Totals : India :Census 2011". Censusindia.gov.in. Retrieved 20 November 2014.
- ↑ "Andhra Pradesh's population growth rate down; sex ratio increases". dna. Retrieved 20 November 2014.
- 1 2 "Total population by religious communities". Censusindia.gov.in. Archived from the original on 19 சனவரி 2008. Retrieved 20 நவம்பர் 2014.
- ↑ "Indian Census 2011". Census Department, Government of India. Archived from the original on 13 செப்டெம்பர் 2015. Retrieved 25 ஆகத்து 2015.
- ↑ Based on data in district article, which itself is derived from the 2011 census data at mandal level