ஆத்ரேயா (திரைக்கதை எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆத்ரேயா
படிமம்:Atreya.gif
புனைப்பெயர் ஆச்சார்யா ஆத்ரேயா
தொழில்
  • பாடலசிரியர்
  • திரைக்கதை எழுத்தாளர்
  • நாடக எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சிறந்த பாடலாசிரியருக்கான நந்தி விருது
கௌரவ முனைவர்
துணைவர்(கள்)
பத்மாவதி (தி. 1940)

ஆச்சார்யா ஆத்ரேயா (Aacharya Aatreya) கிலம்பி வெங்கட நரசிம்மாச்சாரியலு என்ற பெயரில் அறியப்படும் இவர் About this soundpronunciation  (7 மே 1921 - 13 செப்டம்பர் 1989) ஒரு இந்திய கவிஞரும், காட்சியாளரும், நாடக ஆசிரியரும், பாடலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். தெலுங்குத் திரைப்படத்துறையிலும் தெலுங்கு நாடகங்களிலும் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.[1] 1981ஆம் ஆண்டில் "தொலி கோடி கூசிந்தி" படத்திலிருந்து "அந்தமனே லோகமனே" பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் நந்தி விருதைப் பெற்றார்.[2][3]

நடிகர் கொங்கரா ஜக்கையா ஆத்ரேயாவின் நெருங்கிய நண்பராவார். இவர் எழுதிய அனைத்து பாடல்கள், நாடகங்கள், கதைகள் போன்றவற்றை ஏழு தொகுதிகளாக வெளியிட்டு ஜக்கையா தனது நண்பருக்கு மரியாதை செலுத்தினார். ஆத்ரேயா ஒரு தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் மற்றும் உரையாடலாளர் என்று அறியப்பட்டாலும், உண்மையில் இவர் ஒரு நாடக ஆசிரியராகவே நன்கு அறியப்படுகிறார். நாடக ஆசிரியராக இவரது நிலைப்பாடு நன்கு நிறுவப்பட்டுள்ளது

வாழ்க்கை[தொகு]

ஆத்ரேயா 1921 மே 7 ஆம் தேதி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் சூலூர் பேட்டைக்கு அருகிலுள்ள மங்கலம்பாடு என்ற கிராமத்தில் பிறந்தார். [4] தந்தை கிருஷ்ணமாச்சார்யா. தாய் சீதாம்மா. இவரது இயற்பெயர் கிலாம்பி வெங்கட நரசிம்மச்சாரியலு என்பதாகும். [5] தனது மாணவ நாட்களில் நெல்லூரிலும், சித்தூரிலும் பல நாடகங்களை எழுதினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்க தனது படிப்பை கைவிட்டு சிறை சென்றார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு, இவர் நில அளவை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். மேலும் நெல்லூரை மையமாகக் கொண்ட ஜமீன் ரைத்து என்ற இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். [6]

ஆத்ரேயா 1940 இல் பத்மாவதி என்பவரை மணந்தார். [5]

தொழில்[தொகு]

ஆத்ரேயா தனது நாடகங்களில் சமூக சீர்திருத்தம், மாற்றம் மற்றும் உலகளாவிய அமைதிக்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார்.[7][8] நடுத்தர வர்க்க குடும்ப பிரச்சினைகளை சமூகத்திற்குள் கொண்டுவருவதற்காக இவரது நாடகங்கள் உருவாக்கப்பட்டது. இவரது 'பிரவர்த்தனா' மற்றும் 'என்.ஜி.ஓ' நாடகங்கள் ஆந்திர நாடக கலா பரிஷத் விருதுகளை வென்றன. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான முறை மேடையேற்றப்பட்டன. மேலும், இவரது 'கப்பலு' (தவளைகள்) மிகவும் பிரபலமான நாடகமாகும். இராயலசீமையின் பஞ்ச நிலைமையை விவரிக்கும் 'மாயா' நாடகத்தையும், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் வெடித்த இந்து-முஸ்லீம் வன்முறையை விவரிக்கும் 'ஈனாடு' நாடகத்தையும், உலகளாவிய அமைதியை எதிர்பார்க்கும் 'விஸ்வசாந்தி' நாடகத்தையும் இவர் எழுதினார். விஸ்வசாந்தி நாடகம் மாநில அளவிலான விருதையும் வென்றது. 'சாம்ராட் அசோகா', 'கௌதம புத்தர்' மற்றும் 'பயம்' ஆகிய நாடகங்களையும் எழுதினார். தெலுங்கு இலக்கியத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக ஐதராபாத்த்தின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. [7]

ஆத்ரேயா 1951 இல் திரைப்பட உலகில் அறிமுகமானார். பல படங்களுக்கு வசனங்களையும் பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்களில் மனதைக் குறிக்கும் குறிப்புகள் இருப்பதால், இவர் 'மனசு கவி' எஅன்வும் அழைக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டில், நா பாட்ட நீ நோட்ட பலகாலி ( நீங்கள் என் பாடலைப் பாடுவீர்கள் ) என்ற தலைப்பில் தனது படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார். [4]

இறப்பு[தொகு]

ஆத்ரேயா 13 செப்டம்பர் 1989 அன்று இறந்தார். [5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]