உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்ராம் சக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்ராம் சக்கு
உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
2009–2014
முன்னையவர்அமூராஜுலா சிறீதேவி
பின்னவர்கோவா லக்ஷ்மி
தொகுதிஆசிபாபாத்
உறுப்பினர், தெலங்காணா சட்டமன்றம்
பதவியில்
2018–2023
முன்னையவர்கோவா லக்ஷ்மி
பின்னவர்கோவா லக்ஷ்மி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1973
ஆசிபாபாத், ஆதிலாபாத் மாவட்டம், தெலங்காணா
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

ஆத்ராம் சக்கு (Atram Sakku, பிறப்பு: 1973)[1] என்பவர் தெலங்காணாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட ஆதிலாபாத் மாவட்டத்தின் ஆசிஃபாபாது சட்டமன்றத் தொகுதியிலிருந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு 2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 2009-இல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் ஆசிஃபாபாது சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சக்கு, தெலங்காணா மாநிலம் ஆதிலபாத் மாவட்டத்தில் உள்ள ஆசிபாபாத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை ஆத்ராம் ராஜு ஆவார். இவர் கின்னேதாரியில் உள்ள அரசு ஆசிரமப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து, 1989-இல் தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். இவரது மனைவி ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு முகமையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.[2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சக்கு முதன்முதலில் 2009 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் ஆசிபாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 42,907 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலங்காணா இராட்டிர சமிதியின் பெண்ட்ரம் கோபியை 15,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] 2014 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் தெலங்கானா இராட்டிர சமிதியின் கோவா லட்சுமியிடம் 19,055 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[4]

மாநிலப் பிரிவினைக்குப் பிறகு நடந்த 2018 தெலங்காணா சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு மீண்டும் ஆசிபாபாத் தொகுதியைக் கைப்பற்றினார். 2018 தேர்தலில், இவர் 65,788 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலங்கானா இராட்டிர சமிதி வேட்பாளர் கோவா லட்சுமியை 171 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6] பின்னர், இவர் பி.ஆர்.எஸ் கட்சிக்கு மாறினார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Atram Sakku(Indian National Congress (INC)):Constituency- Asifabad (Adilabad) - Affidavit Information of Candidate". www.myneta.info. 2014. Retrieved 2025-05-31.
  2. ↑ "Athram Sakku(BRS):Constituency- ADILABAD (ST)(TELANGANA) - Affidavit Information of Candidate:". www.myneta.info. 2024. Retrieved 2025-05-31.
  3. ↑ "Asifabad Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-05-31.
  4. ↑ "Asifabad Election Result 2018 Live Updates: Candidate List, Winner, MLA, Leading, Trailing, Margin". News18 (in ஆங்கிலம்). Retrieved 2025-05-31.
  5. ↑ "Asifabad Constituency Election Results 2023: Asifabad Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-05-31.
  6. ↑ https://www.business-standard.com/elections/telangana-elections/athram-sakku-candidate-23462
  7. ↑ "Ex-MLA Atram Sakku's absence at KTR's meeting triggers row". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). 2024-10-25. Retrieved 2025-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்ராம்_சக்கு&oldid=4634255" இலிருந்து மீள்விக்கப்பட்டது