ஆத்தூர் - சேலம் சட்டமன்றத் தொகுதி
| ஆத்தூர் (சேலம்) | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 82 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| மக்களவைத் தொகுதி | கள்ளக்குறிச்சி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,54,705 (2021)[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி (Attur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதே பெயரில் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதி உண்டு.
சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளின் ஒன்றான ஆத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆத்தூர் தனித் தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதியில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கீரிப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டம் மற்றும் ஆத்தூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.
இத்தொகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புமே முக்கிய தொழில்களாக உள்ளன. இங்கு வாழை, மரவள்ளி, மஞ்சள், பருத்தி, நெல், வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர, பாக்கு மரம் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பகுதி கிராமப்புற மக்களுக்கு மரவள்ளி அரவை ஆலைகள், நூற்பாலைகள் மற்றும் நெல் அறுவடை எந்திரங்களும் வேலைவாய்ப்பு வழங்குகின்றன. இத்தொகுதி ஜவ்வரிசி உற்பத்தியில் மாவட்ட அளவில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் மரவள்ளி அரவை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த தொகுதியில் ஆண்கள்: 1,22,440. பெண்கள்: 1,31,348 மற்றும் திருநங்கைகள் 12 என மொத்தம்: 2,53,800 வாக்காளர்கள் உள்ளனர்.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]ஆத்தூர் தாலுகா (பகுதி) ரங்கப்பநாயக்கன்பாளையம், கோபாலபுரம், மல்லியகரை, ஈச்சம்பட்டி, சொக்கநாதபுரம், தாண்டவராயபுரம், துலுக்கனூர், மஞ்சினி, புங்கவாடி, பைத்தூர், சீலியம்பட்டி, அரசநத்தம் மற்றும் வளையமாதேவி
பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டம் (பகுதி) இடையப்பட்டி, பனைமடல், செக்கடிப்பட்டி, குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, மன்னூர் (ஆர்.எப்), மன்னூர், கோவில்புதூர், கரியகோயில்வளவு, குன்னூர், சூலாங்குறிச்சி, அடியனூர், ராமநாயக்கன்பாளையம், கொட்டவாடி, பேளூர்கரடிப்பட்டி, மேட்டுடையாம் பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், வடகூத்தம்பட்டி, புத்திரகவுண்டன்பாளையம், வீரக்கவுண்டனூர், ஓலப்பாடி, கல்பகனூர், மேட்டுப்பாளையம், ஜாரிகொத்தம்பாடி, அழகாபுரம், அப்பமசமுத்திரம், கீழாவாரை, பட்டிமேடு விரிவாக்கம் (ஆர்.எப்), முட்டல், அம்மம்பாளையம், கல்லாநத்தம், தென்னங்குடிபாளையம், அக்கிசெட்டிபாளையம், முத்தாக்கவுண்டனூர், ஆரியபாளையம், உமையாள்புரம், ஏத்தாப்பூர், கரடிப்பட்டி, தமையனூர், மேற்கு ராஜபாளையம், களரம்பட்டி, கிராமங்கள்.
பெத்தநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), கீரிப்பட்டி (பேரூராட்சி), ஏத்தாப்பூர் (பேரூராட்சி), ஆத்தூர் (நகராட்சி) மற்றும் நரசிங்கபுரம் (பேரூராட்சி)[3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | எம். பி. சுப்பிரமணியம் | சுயேச்சை | 12394 | 39.94 | பி. செல்லமுத்து படையாச்சி | காங்கிரசு | 6872 | 22.15 |
| 1957 | டி. இருசப்பன்/எம். பி. சுப்பிரமணியம் | சுயேச்சை | 30984 | 21.50 | எம். பி. சுப்ரமணியம் | சுயேச்சை | 29153 | 20.23 |
| 1962 | எசு. அங்கமுத்து நாயக்கர் | காங்கிரசு | 23542 | 39.28 | கே. என். சிவபெருமாள் | திமுக | 19811 | 33.05 |
| 1967 | கே. என். சிவபெருமாள் | திமுக | 40456 | 57.22 | எம். பி. சுப்ரமணியம் | காங்கிரசு | 30252 | 42.78 |
| 1971 | வி. பழனிவேல் | திமுக | 39828 | 52.79 | சி. பழனிமுத்து | காங்கிரசு (ஸ்தாபன) | 35617 | 47.21 |
| 1977 | சி. பழனிமுத்து | காங்கிரசு | 19040 | 29.80 | பி. கந்தசாமி | அதிமுக | 18693 | 26.25 |
| 1980 | சி. பழனிமுத்து | காங்கிரசு | 38416 | 53.44 | பி. கந்தசாமி | அதிமுக | 31525 | 43.85 |
| 1984 | சி. பழனிமுத்து | காங்கிரசு | 55927 | 66.53 | எ. எம். இராமசாமி | திமுக | 24804 | 29.51 |
| 1989 | ஆ. மு. இராமசாமி | திமுக | 33620 | 38.22 | எம். பி. சுப்ரமணியம் | அதிமுக (ஜெயலலிதா) | 27795 | 31.60 |
| 1991 | வெ. தமிழரசு | அதிமுக | 61060 | 64.49 | எ. எம். இராமசாமி | திமுக | 24475 | 25.85 |
| 1996 | ஆ. மு. இராமசாமி | திமுக | 59353 | 57.17 | எ. கே . முருகேசன் | அதிமுக | 37057 | 35.69 |
| 2001 | ஏ. கே . முருகேசன் | அதிமுக | 64936 | 57.85 | மு. ரா. கருணாநிதி | திமுக | 40191 | 35.81 |
| 2006 | எம். ஆர். சுந்தரம் | காங்கிரசு | 53617 | -- | எ. கே . முருகேசன் | அதிமுக | 43185 | -- |
| 2011 | சு. மதேஸ்வரன் | அதிமுக | 88036 | -- | எஸ். க. அர்த்தநாரி | காங்கிரசு | 58180 | -- |
| 2016 | இரா. மா. சின்னத்தம்பி | அதிமுக | 82827 | -- | எஸ். க. அர்த்தநாரி | காங்கிரசு | 65493 | -- |
| 2021 | அ. ப. ஜெயசங்கரன் | அதிமுக | 95308 | 47.72 | கு. சின்னதுரை | திமுக | 87051 | 43.58 |
1957 இல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள் (ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்தவராகவும், மற்றொருவர் எந்த இனமாகவும் இருக்கலாம்) எனவே இருசப்பன் & எம். பி. சுப்ரமணியம் இருவரும் வெற்றி பெற்றனர்.
1977இல் ஜனதா கட்சியின் எ. எஸ். சின்னசாமி 16860 (26.39%) & திமுகவின் டி. பெருமாள் 10645 (15.67%) வாக்குகளும் பெற்றனர்.
1989இல் காங்கிரசின் சி. பழனிமுத்து 15559 (17.69%) வாக்குகள் பெற்றார்.
2006 தேமுதிகவின் எ. ஆர். இளங்கோவன் 15654 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | அ. ப. ஜெயசங்கரன் | 95,308 | 48.16% | +3.81 | |
| தி.மு.க. | கே. சின்னதுரை | 87,051 | 43.99% | புதியவர் | |
| நாதக | எசு. கிருஷ்ணவேனி | 10,233 | 5.17% | +4.35 | |
| மநீம | பி. சிவகுமார் | 1,959 | 0.99% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,834 | 0.93% | -0.54 | |
| அ.ம.மு.க. | சு. மதேசுவரன் | 1,699 | 0.86% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,257 | 4.17% | -5.11% | ||
| பதிவான வாக்குகள் | 197,909 | 77.70% | -2.08% | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 326 | 0.16% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 254,705 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 3.81% | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. மா. சின்னத்தம்பி | 82,827 | 44.34% | -11.19 | |
| காங்கிரசு | எசு. கே. அர்த்தநாரி | 65,493 | 35.06% | -1.64 | |
| பாமக | ஜி. அம்சவேணி | 18,363 | 9.83% | புதியவர் | |
| விசிக | கே. பி. ஆதித்தியன் | 8,532 | 4.57% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 2,742 | 1.47% | புதியவர் | |
| கொ.ம.தே.க. | ஆர். ஜெயசீலன் | 2,413 | 1.29% | புதியவர் | |
| இஜக | ஆர். செல்லதுரை | 1,747 | 0.94% | புதியவர் | |
| நாதக | எசு. சதீசுபாபு | 1,531 | 0.82% | புதியவர் | |
| பசக | எம். பி. மாரியப்பன் | 947 | 0.51% | -0.35 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,334 | 9.28% | -9.55% | ||
| பதிவான வாக்குகள் | 186,788 | 79.78% | -0.74% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 234,136 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -11.19% | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | சு. மதேஸ்வரன் | 88,036 | 55.53% | +19.05 | |
| காங்கிரசு | எசு. கே. அர்த்தநாரி | 58,180 | 36.70% | -8.6 | |
| இஜக | என். அருள்குமார் | 2,993 | 1.89% | புதியவர் | |
| சுயேச்சை | கே. பழனிராஜா | 2,348 | 1.48% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. அண்ணாதுரை | 1,690 | 1.07% | -0.21 | |
| சுயேச்சை | சி. இராஜமாணிக்கம் | 1,462 | 0.92% | புதியவர் | |
| பசக | எம். பி. மாரியப்பன் | 1,366 | 0.86% | -0.09 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 29,856 | 18.83% | 10.02% | ||
| பதிவான வாக்குகள் | 158,536 | 80.52% | 6.90% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 196,894 | ||||
| காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 10.23% | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். ஆர். சுந்தரம் | 53,617 | 45.30% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. கே. முருகேசன் | 43,185 | 36.48% | -21.37 | |
| தேமுதிக | எ. ஆர். இளங்கோவன் | 15,654 | 13.22% | புதியவர் | |
| பா.ஜ.க | எ. குமாரவேல் | 1,510 | 1.28% | புதியவர் | |
| சுயேச்சை | என். இலட்சுமணன் | 1,150 | 0.97% | புதியவர் | |
| பசக | எம். பி. மாரியப்பன் | 1,130 | 0.95% | புதியவர் | |
| சுயேச்சை | கே. சுந்தரம் | 854 | 0.72% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. ஆண்டோ திராவிட் | 756 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,432 | 8.81% | -13.23% | ||
| பதிவான வாக்குகள் | 118,370 | 73.62% | 7.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 160,786 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -12.56% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஏ. கே . முருகேசன் | 64,936 | 57.85% | +22.16 | |
| தி.மு.க. | மு. இரா. கருணாநிதி | 40,191 | 35.81% | -21.36 | |
| சுயேச்சை | பி. இரவிகுமார் | 1,893 | 1.69% | புதியவர் | |
| மதிமுக | வி. கோபால்ராஜ் | 1,407 | 1.25% | +0.67 | |
| சுயேச்சை | வி. அங்கமுத்து | 1,290 | 1.15% | புதியவர் | |
| சுயேச்சை | கே. நடராஜன் | 1,033 | 0.92% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 24,745 | 22.05% | 0.57% | ||
| பதிவான வாக்குகள் | 112,244 | 65.63% | -2.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 171,024 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 0.69% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆ. மு. இராமசாமி | 59,353 | 57.17% | +31.32 | |
| அ.இ.அ.தி.மு.க. | எ. கே. முருகேசன் | 37,057 | 35.69% | -28.8 | |
| அ.இ.இ.கா. (தி) | பி. எம். சந்தானம் | 5,660 | 5.45% | புதியவர் | |
| மதிமுக | எம். மனோகரன் | 603 | 0.58% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,296 | 21.47% | -17.17% | ||
| பதிவான வாக்குகள் | 103,824 | 68.14% | 3.29% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 158,343 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -7.33% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | வெ. தமிழரசு | 61,060 | 64.49% | +32.9 | |
| தி.மு.க. | ஆ. மு. இராமசாமி | 24,475 | 25.85% | -12.37 | |
| பாமக | எம். பழனிவேல் | 8,164 | 8.62% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 36,585 | 38.64% | 32.02% | ||
| பதிவான வாக்குகள் | 94,676 | 64.84% | -1.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 151,368 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 26.28% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆ. மு. இராமசாமி | 33,620 | 38.22% | +8.71 | |
| அ.இ.அ.தி.மு.க. | எம். பி. சுப்பிரமணியம் | 27,795 | 31.60% | புதியவர் | |
| காங்கிரசு | சி. பழனிமுத்து | 15,559 | 17.69% | -48.85 | |
| சுயேச்சை | கே. வி. இராமநாதன் | 7,201 | 8.19% | புதியவர் | |
| சுயேச்சை | கே. வி. முருகேசன் | 1,636 | 1.86% | புதியவர் | |
| சுயேச்சை | வி. அசோகன் | 748 | 0.85% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,825 | 6.62% | -30.40% | ||
| பதிவான வாக்குகள் | 87,971 | 66.63% | -6.71% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 135,294 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -28.32% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. பழனிமுத்து | 55,927 | 66.53% | +13.09 | |
| தி.மு.க. | ஆ. மு. இராமசாமி | 24,804 | 29.51% | புதியவர் | |
| சுயேச்சை | பி. எம். சந்தானம் | 1,220 | 1.45% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. நாச்சியப்பன் | 1,191 | 1.42% | புதியவர் | |
| சுயேச்சை | சி. சுந்தரராஜன் | 626 | 0.74% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,123 | 37.02% | 27.44% | ||
| பதிவான வாக்குகள் | 84,060 | 73.35% | 8.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 119,635 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 13.09% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. பழனிமுத்து | 38,416 | 53.44% | +23.64 | |
| அ.இ.அ.தி.மு.க. | பி. கந்தசாமி | 31,525 | 43.85% | +14.6 | |
| இகுக | சி. என். கங்காணி | 1,945 | 2.71% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,891 | 9.59% | 9.04% | ||
| பதிவான வாக்குகள் | 71,886 | 64.44% | 5.42% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 113,439 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 23.64% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வி. பழனிவேல் | 39,828 | 52.79% | -4.42 | |
| காங்கிரசு | சி. பழனிமுத்து | 35,617 | 47.21% | +4.42 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,211 | 5.58% | -8.85% | ||
| பதிவான வாக்குகள் | 75,445 | 71.56% | -4.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 108,265 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -4.42% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | வி. பழனிவேல் | 39,828 | 52.79% | -4.42 | |
| காங்கிரசு | சி. பழனிமுத்து | 35,617 | 47.21% | +4.42 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,211 | 5.58% | -8.85% | ||
| பதிவான வாக்குகள் | 75,445 | 71.56% | -4.51% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 108,265 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -4.42% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. என். சிவபெருமாள் | 40,456 | 57.22% | +24.16 | |
| காங்கிரசு | எம். பி. சுப்ரமணியன் | 30,252 | 42.78% | +3.51 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,204 | 14.43% | 8.21% | ||
| பதிவான வாக்குகள் | 70,708 | 76.08% | 6.35% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 95,362 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 17.94% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எசு. அங்கமுத்து நாயக்கர் | 23,542 | 39.28% | +23.36 | |
| திமுக | கே. என். சிவபெருமாள் | 19,811 | 33.05% | புதியவர் | |
| ததேக | எம். பி. சுப்ரமணியம் | 13,686 | 22.83% | புதியவர் | |
| சுதந்திரா | ஆர். சரவண படையாச்சி | 1,888 | 3.15% | புதியவர் | |
| நாதக | ஆர். இரங்கசாமி | 1,009 | 1.68% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,731 | 6.22% | 4.95% | ||
| பதிவான வாக்குகள் | 59,936 | 69.72% | -23.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 88,586 | ||||
| சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 17.78% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | டி. இருசப்பன் | 30,984 | 21.50% | புதியவர் | |
| சுயேச்சை | எம். பி. சுப்பிரமணியன் | 29,153 | 20.23% | புதியவர் | |
| காங்கிரசு | ஏ. சாம்பசிவ ரெட்டியார் | 22,937 | 15.92% | -6.23 | |
| சுயேச்சை | எம். ஆறுமுகம் | 21,089 | 14.64% | புதியவர் | |
| காங்கிரசு | ஏ. துரைசாமி | 13,138 | 9.12% | -13.03 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | சி. துரைசாமி | 8,663 | 6.01% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | டி. இராமச்சந்திரன் | 7,187 | 4.99% | புதியவர் | |
| சுயேச்சை | கே. ஆர். பெரியண்ணன் | 6,023 | 4.18% | புதியவர் | |
| சுயேச்சை | அகிலாண்டம் | 4,924 | 3.42% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,831 | 1.27% | -16.53% | ||
| பதிவான வாக்குகள் | 144,098 | 93.35% | 44.56% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 154,364 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | -18.44% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | எம். பி. சுப்பிரமணியம் | 12,394 | 39.94% | புதியவர் | |
| காங்கிரசு | பி. செல்லமுத்து படையாட்சி | 6,872 | 22.15% | புதியவர் | |
| சுயேச்சை | எம். முத்துசாமி படையாட்சி | 4,044 | 13.03% | புதியவர் | |
| சுயேச்சை | இராமச்சந்திர பட் | 3,393 | 10.93% | புதியவர் | |
| சுயேச்சை | வி. பழனிவேல் கவுண்டர் | 2,184 | 7.04% | புதியவர் | |
| சோக | எசு. கந்தசாமி படையாட்சி | 2,142 | 6.90% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,522 | 17.80% | |||
| பதிவான வாக்குகள் | 31,029 | 48.79% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 63,599 | ||||
| சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 December 2021. Retrieved 28 Jan 2022.
- ↑ ஆத்தூர் தொகுதி 2021 தேர்தல் கண்ணோட்டம்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
- ↑ "ஆத்தூர் Election Result". Retrieved 15 Oct 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.