உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம்

ஆள்கூறுகள்: 16°49′14″S 145°37′59″E / 16.8204646°S 145.6330483°E / -16.8204646; 145.6330483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம்
Map
16°49′14″S 145°37′59″E / 16.8204646°S 145.6330483°E / -16.8204646; 145.6330483
திறக்கப்பட்ட தேதி1987[1]
அமைவிடம்குராண்டா, குயின்சுலாந்து, ஆத்திரேலியா
விலங்குகளின் எண்ணிக்கை1,500[2]
வலைத்தளம்www.australianbutterflies.com

ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம் (Australian Butterfly Sanctuary) என்பது ஒரு பட்டாம்பூச்சிக் காட்சிச்சாலை ஆகும். இது ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தில் குராண்டா என்ற நகரத்தில் அமைந்துள்ளது. குரண்டா வண்ணத்துப்பூச்சி சரணாலயம், ஆத்திரேலியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி வளர்க்கும் இடமாகக் கருதப்படுகிறது. பால் மற்றும் சூசன் ரைட் ஆகியோர்களால் இச்சரணாலயம் 1987 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.[1] இந்த சரணாலயத்தில் ஆத்திரேலிய நாட்டைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.[2] ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள ஆய்வகத்தில் சுமார் 30,000 கம்பளிப்புழுக்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு 24000 கூட்டுப்புழு பருவப்பூச்சிகளாக பறவைக் கூடுகளில் விடப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "History". australianbutterflies.com. Australian Butterfly Sanctuary. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2012.
  2. 2.0 2.1 "Kuranda". cairns.com.au. News Limited. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2012.
  3. "Interesting Facts About Butterflies". australianbutterflies.com. Australian Butterfly Sanctuary. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]