உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியாவில் சமயமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை, சமய ஐயப்பாடு, கட்டற்ற சிந்தனை, மதச்சார்பற்ற மனிதநேயம் அல்லது பொது சமயமின்மை போன்றவை ஆத்திரேலியாவில் அதிகரித்து வருகின்றன. போருக்குப் பிந்தைய ஆத்திரேலியா மிகவும் மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் மதம் முக்கிய பங்கு வகிக்கவில்லை.

நாட்டின் 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், 38.9% ஆத்திரேலியர்கள் (அல்லது 9,886,957 பேர்) 'மதம் இல்லை' அல்லது அவர்களின் மதம் சாராமையைக் குறிப்பிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைவிட இது கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் (2,846,240 பேரைவிட) அதிகம். 7.2% பேர் தங்கள் மதத்தைக் குறிப்பிடவில்லை அல்லது தெளிவற்ற பதிலைக் கொடுத்தனர். அதாவது 46% ஆஸ்திரேலியர்கள் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மதத் தொடர்பைக் கூறவில்லை. இது கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பைவிட 6.4% அதிகமாகும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Cultural diversity: Census, 2021 | Australian Bureau of Statistics". www.abs.gov.au (in ஆங்கிலம்). 2022-06-28. பார்க்கப்பட்ட நாள் 2022-06-28.