உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரோனீசிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆஸ்திரோனீசிய மொழிகள்
Austronesian Language
புவியியல்
பரம்பல்:
தைவான், கடல்சார் தென்கிழக்காசியா, மடகாசுகர், இந்தோசீனா, ஆய்னான் சீனா, ஓசியானியா
வகைப்பாடு: உலகின் முதன்மை மொழிக் குடும்பங்களில் ஒன்று
துணைப்பிரிவுகள்:


ஆஸ்திரோனீசிய மொழிக்குடும்பம் (ஆங்கிலம்: Austronesian languages) என்பது கடல்சார் தென்கிழக்காசியா, ஓசானியா, மடகாசுக்கர், தைவான் (தைவான் பழங்குடி மக்களால்) பரவலாகப் பேசப்படும் மொழிக் குடும்பமாகும்.[1] அவை சுமார் 328 மில்லியன் மக்களால் (உலக மக்கள்தொகையில் 4.4%) பேசப்படுகின்றன.[2][3] இது பேசுபவர்களின் எண்ணிக்கையில் ஐந்தாவது பெரிய மொழிக் குடும்பமாக உள்ளது.

ஆஸ்திரோனீசிய மொழிகளில் மலாய் மொழி (இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 250-270 மில்லியன் மக்கள்) ஜாவானிய மொழி, சுண்டா மொழி, பிலிப்பீன்சு தகலாகு மொழி[4]), மலகசி மொழி மற்றும் செபுவான மொழி ஆகிய மொழிகள் அடங்கும்.[5] சில மதிப்பீடுகளின்படி, ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தில் 1,257 மொழிகள் உள்ளன என அறியப்படுகிறது.[6]

பொது

[தொகு]

இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம், நைகர்-காங்கோ மொழிக்குடும்பம், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பம், யூரலிய மொழிக்குடும்பம் (Uralic) போன்று இந்த ஆஸ்திரோனீசிய மொழிக்குடும்பமும் நன்றாக நிறுவப்பட்ட பழைய மொழிக்குடும்பம் ஆகும்.[2][3]

ஓட்டோ தெம்புவுல்பு (Otto Dempwolff) என்னும் இடச்சு (செருமானிய) மானிடவியல் மற்றும் மொழியியல் அறிஞரே முதன்முதலாக ஒப்பீட்டு ஆய்வு முறையில் இம்மொழிகளை 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விரிவாக ஆய்ந்தார்.

பின்னர் வில்லெம் இசுமிட்டு (Wilhelm Schmid) என்னும் மற்றொரு இடச்சு அறிஞரே தென்றல் (தெற்கு திசைக் காற்று) என்னும் பொருள் படும் அவுசிட்டர் (auster) என்னும் சொல்லோடு தீவு எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லான நெசோசு (nêsos) என்பதையும் இணைத்து இடச்சுச் சொல்லாகிய அவுசிட்ரோனேசிழ்சு (austronesisch) என்பதை உருவாக்கி, இந்த ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தைக் குறித்தார். இது பின்னர் ஆங்கிலத்தில் (Austronesian) எனவும் தமிழில் ஆஸ்திரோனீசிய மொழிக்குடும்பம் எனவும் பெயர் பெறுகின்றது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Blust, Robert Andrew "Austronesian Languages". Encyclopædia Britannica.  
  2. 2.0 2.1 "Statistical Summaries; Ethnologue".
  3. 3.0 3.1 "Austronesian; Ethnologue".
  4. Gonzalez, Andrew B. (1980). Language and Nationalism: The Philippine Experience Thus Far. Manila: Ateneo de Manila University Press. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9711130009.
  5. Sneddon, James Neil (2004). The Indonesian Language: Its History and Role in Modern Society. UNSW Press. p. 14.)
  6. Robert Blust (2016). History of the Austronesian Languages. University of Hawaii at Manoa.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரோனீசிய_மொழிகள்&oldid=4085416" இலிருந்து மீள்விக்கப்பட்டது