உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்தியா உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தியா உசைன்
1930களில் ஆத்தியா
1930களில் ஆத்தியா
பிறப்பு1913
இலக்னோ, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு1998 (அகவை 84–85)
தொழில்எழுத்தாளர்
தேசியம் இந்தியா
வகைபுதினம்
துணைவர்அலி பகதூர் அபிபுல்லா (1909–1982)
பிள்ளைகள்வாரிஸ் உசைன், சாமா அபிபுல்லா

ஆத்தியா உசைன் (Attia Hosain, 1913–1998) ஓர் பிரித்தானிய-இந்திய புதின எழுத்தாளரும், ஒலிபரப்பாளரும், பத்திரிகையாளரும், நடிகையும் ஆவார்.[1] [2] இவர் கடிதங்களின் பெண் மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர். இவரது தாய் மொழி உருது என்றாலும் ஆங்கிலத்தில் எழுதினார்.[3] இவர் அரை சுயசரிதையான, சன்லைட் ஆன் அ புரோக்கன் காலம், பீனிக்ஸ் பிளெட் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதினார். இங்கிலாந்தில் குடியேற்றத்திற்கு பிந்தைய இலக்கியத்திற்கான பங்களிப்பில் இவரது பணி தொடங்கியது. அனிதா தேசாய், விக்ரம் சேத், அமர் உசேன் , கமிலா சம்சி ஆகியோர் இவரது செல்வாக்கை ஒப்புக் கொண்டனர்.

பின்னணியும் கல்வியும்

[தொகு]

ஆத்தியா, இலக்னோவில் ஒரு தாராளவாத கித்வாய் குலத்தில் பிறந்தார். இவரது தந்தை சாகித் உசைன் கித்வாய், கேம்பிரிசில் படித்த தாலுக்தார் ஆவார். இவரது தாயார் பேகம் நிசார் பாத்திமா ககோரியின் ஆல்வி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையிடமிருந்து இவர் அரசியல் மற்றும் தேசியத்தில் மிகுந்த ஆர்வத்தை பெற்றார். கவிஞர்கள் மற்றும் அறிஞர்களின் குடும்பத்தினரான இவரது தாயின் வழிலிருந்து இவர் உருது, பாரசீகம், அரபு மொழி அறிவைப் பெற்றார். இகனோவின் லா மார்டினியர் பெண்களுக்கான பள்ளி, இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் பயின்ற பிறகு, இலக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[4]

உசைன் இரண்டு கலாச்சாரங்களில் வளர்ந்தார். ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய இலக்கியத்தின் நியதியையும், திருக்குர்ஆனையும் படித்தார்.[5]

தனது 15 வயதில் ஆத்தியா உசேன்

இவரது தந்தை மோதிலால் நேருவின் நண்பராக இருந்தார். 1933 ஆம் ஆண்டில், சரோஜினி நாயுடு இவரை ஊக்குவித்தார். மேலும் கொல்கத்தாவில் நடந்த அகில இந்திய மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்.[1]

தனது சொந்த வார்த்தைகளில், ஆத்தியா கூறினார், "முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் இடதுசாரிகளின் அரசியல் சிந்தனைகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன்."[6] இவர், கொல்கத்தாவின் தி ஸ்டேட்ஸ்மேன், பத்திரிக்கையிலும் எழுதினார்.

குடும்பம்

[தொகு]

இவர் தனது உறவினரான அலி பகதூர் அபிபுல்லாவை தங்களது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாமா அபிபுல்லா, வாரிஸ் உசைன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். 1940களின் முற்பகுதியில், இவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அலி பகதூர் அரசுப் பணியில் சேர்ந்தார். முதலில் துணி ஆணையத்தில் இருந்தார். பின்னர் இரண்டாம் உலகப் போர் வெடித்த பிறகு தென்கிழக்கு ஆசியாவுக்கான விநியோக ஆணையராக இருந்தார்.

அலி பகதூர் அபிபுல்லா 1947இல் தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தக ஆணையத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நியமிக்கப்பட்டார். இந்தியப் பிரிப்பு நாட்டைப் பிரித்து இரண்டு மத சமூகங்களைப் பிரித்தது இவருக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

எழுதுதல்

[தொகு]

1953ஆம் ஆண்டில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பீனிக்ஸ் பிளெட் வெளியிடப்பபட்டது.[7] 1961ஆம் ஆண்டில், சட்டோ மற்றும் விண்டஸ் என்ற பதிப்பகம் சன்லைட் ஆன் அ புரோகன் காலம் என்ற நூலை வெளியிட்டனர்.[8]

தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரை, இவர் ஒரு தீவிரமான, சின்னச்சின்ன அரசியல் நனவை வைத்திருந்தார். மேலும், பாசாங்குத்தனம், தீவிரவாதம், மதவெறி ஆகியவற்றைக் கண்டித்தார். கடுமையான பகுப்பாய்வு இல்லாமல் அவள் எந்த தத்துவத்தையும் ஏற்கவில்லை என்றாலும், தன்னைச் சுற்றியுள்ள மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே நல்லிணக்கத்திற்காக போராடி, சோசலிசம், மனிதாபிமானம் மற்றும் அறிவொளி பெற்ற இஸ்லாத்திலிருந்து வலிமை பெற்றார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Distant Traveller, new and selected fiction: edited by Aamer Hossein with Shama Habibullah, with foreword and afterword by them, and introduction by Ritu Menon (Women Unlimited, India 2013). This contains the first publication of a section of Attia Hosain's unfinished novel, No New Lands, No New Seas.
  2. Ghoshal, Somak (15 August 2017). "India at 70: A Muslim Woman's Story of Nationalism, Partition and her awakening into Feminism". HuffPost.
  3. "Obituary: Attia Hosain". 
  4. Khan, Naseem (5 Feb 1998). "Obituary: Attia Hosain". The Independent, UK. https://www.independent.co.uk/news/obituaries/obituary-attia-hosain-1142971.html. 
  5. Ghoshal, Somak (15 August 2017). "India at 70: A Muslim Woman's Story of Nationalism, Partition and her awakening into Feminism". HuffPost.Ghoshal, Somak (15 August 2017). "India at 70: A Muslim Woman's Story of Nationalism, Partition and her awakening into Feminism". HuffPost.
  6. Hosain, Attia. Voices of the Crossing.
  7. Hosain, Attia (1989). Phoenix Fled: And Other Stories.
  8. Hosain, Attia (1961). Sunlight on a Broken Column.
  9. Hussein, Aamer (31 January 1998). "Passages from India". The Guardian. 

மேலும் படிக்க

[தொகு]
  • The Literary Estate of Attia Hosain, 1928–1998. Diaries, letters, images, notes.
  • A part of the whole, Rakshandha Jalil, The Hindu, 2 Mar 2013.
  • I am a Universalist-Humanist, Nilufer E. Bharucha. Biblio 3.7-8 (July-August 1998).
  • Unsettling Partition: Literature, Gender, Memory. Jill Didur, 2007.
  • Writers of the Indian Diaspora - A Diptych Volume. R.K.Kaul & Jasbir Jain. "Attia Hosain".
  • An image of India by an Indian Woman: Attia Hosain's Life and Fiction - Unpublished MA thesis. Laura Bondi. For University Degli Studio Venezia, 1993.
  • Dwelling in the Archive: Women Writing House, Home, and History in Late Colonial India. Antoinette Burton. Oxford: Oxford University Press, 2003.
  • Hosain, Attia Shahid. அனிதா தேசாய். Oxford Dictionary of National Biography
  • Attia Hosain, Her Life and Work. Lakshmi Holmstrom. Indian Review of Books 8–9, 1991.
  • The Heart in Pieces Generation, Mushirul Hasan. The Indian Express, 21 Feb 1998.
  • The Silent Gap. சசி தேசுபாண்டே. Biblio May-June 2013.
  • Attia Hosain (1913-1998) - The Sunlight on a Broken Column, Batul Mukhtiar. Blog, 1 May 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]

காணொளிகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தியா_உசைன்&oldid=4092633" இலிருந்து மீள்விக்கப்பட்டது