ஆதி வரலாறு
ஆதி வரலாறு (Proto-history) என்பது தொல்பொருள் சான்றுகளிலிருந்து மட்டுமே வரலாறு பெறப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் மற்றும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிக்கிறது.[1][2]
ஆவணப்படுத்தப்படாத ஒரு மக்கள் பண்பாட்டின் வரலாற்றின் சில கூறுகள், பிற பகுதி மக்களின் பண்பாட்டில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். அதையே ஆதி வரலாறு என்பர். எடுத்துக்காட்டாக, ஆவணப்படுத்தப்படாத கொரியாவின் மூன்று ஆதி-இராஜ்ஜியங்கள் குறித்து சீனர்கள் தங்கள் எழுத்தில் பதிவு செய்துள்ளனர்.[3]வட அமெரிக்காவின் மிசிசிப்பி பூர்வகுடி மக்களின் பண்பாட்டை ஆரம்பகால ஐரோப்பிய ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டவை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை ஆகும்.
தோற்றம்
[தொகு]வரலாற்றுக்கு முந்தைய காட்டுமிராண்டி இனக்குழுவினரின் பண்பாட்டை குறிப்பதற்காக ஆதி-வரலாறு எனும் சொல் ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்று அறிஞர்களால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
கிமு முதல் மில்லினியத்தில் சில சமூகங்களில் எழுத்துகள் இருந்ததால், அந்தக் காலம் பெரும்பாலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்குப் பதிலாக ஆதி வரலாற்றுக் காலம் என்று அழைக்கப்படுகிறது. தொல் பொருட்கள் மூலம் பெறப்பட்ட கடந்த காலத்தைப் பற்றிய புரிதல், வரலாற்று நூல்களிலிருந்து பெறப்பட்ட புரிதலிலிருந்து பரவலாக வேறுபாடுகள் கொண்டுள்ளது. தொல்பொருள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் ஆகிய இரண்டு வகையான ஆதாரங்களையும் கொண்டிருப்பது ஒரு பண்பாட்டின் சிறப்பு அம்சமாகும். பண்டைய எகிப்தியப் பண்பாடு மற்றும் மெசொப்பொத்தேமியா பண்பாடுகள் எழுத்து மற்றும் தொல்பொருள் ஆவணங்கள் நிறையக் கொண்டுள்ளது. தமிழ் பண்பாட்டில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் கொண்டிருப்பினும் அதற்குரிய தொல்பொருள் சான்றாவணங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.
வட அமெரிக்காவின் பூர்வகுடி மக்களின் வரலாறு குறித்த பிரையன் எம். ஃபேகனின் எழுத்துக்கள்[4]மற்றும் அரேபிய தீபகற்பம் குறித்த முகமது அப்துல் நயீமின் படைப்புகள்.[5]ஆதி வரலாறுகள் குறித்து ஆராய்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cunliffe, Barry (2001). The Oxford Illustrated History of Prehistoric Europe. Oxford: Oxford University Press. ISBN 978-0-19-285441-4.
- ↑ Taylor, Timothy (1994). "Thracians, Scythians and Dacians". In Cunliffe, Barry (ed.). The Oxford Illustrated Prehistory of Europe. Oxford: Oxford University Press. pp. 373–410. ISBN 978-0-19-814385-7.
- ↑ Bahn, Paul (ed.) The Penguin Archaeology Guide Penguin Books Ltd (29 Nov 2001) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-029308-1 p. 368
- ↑ Fagan, Brian (2005). Ancient North America: The Archaeology of a Continent (4th ed.). London: Thames & Hudson. ISBN 978-0-500-28532-9.
- ↑ Nayeem, Muhammed Abdul, ed. (1990). Prehistory and Protohistory of the Arabian Peninsula (5 volumes). Hyderabad: Hyderabad Pub.