ஆதி கங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி கங்கா
Adi Kanga
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்இந்தியன்
பிறப்பு(1923-03-16)மார்ச்சு 16, 1923
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்புஏப்ரல் 1, 2013(2013-04-01) (அகவை 90)
சிட்னி, ஆத்திரேலியா
பணி
திட்டங்கள்நவி மும்பை, வாசி மேம்பாலம்

ஆதி கங்கா (Adi Kanga) ஓர் இந்திய கட்டடப் பொறியாளர் ஆவார். ஓர் எழுத்தாளராகவும் இருந்த இவர் நவி மும்பை நகரத்தின் திட்டமிடுபவர்களில் ஒருவராக இருந்தார் [1]. 1923 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் மும்பையில் ஒரு பார்சி குடும்பத்தில் ஆதிகங்கா பிறந்தார் [2]. நகர தொழிற்சாலை மேம்பாட்டு ஆணையத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். இங்கிருக்கும்போதுதான் நவி மும்பை நகரத்தைத் திட்டமிடுவதிலும் நிறைவேற்றுவதிலும் கங்கா ஈடுபட்டிருந்தார், இவர்தான் வாசி பாலம் கட்டுவதற்காக பரிந்துரைத்தார் [3]. கங்கா தனிப்பட்ட முறையில் வாசி நகரில் அமையவிருந்த உள்ள புதிய நகரத்திற்கான திட்டங்களை தனது இல்லத்தில் உள்ள சாப்பாட்டு மேசையில் வரைந்தார். சிட்கோவில் வரைவாளர்கள் கிடைப்பதற்கு முன்பே முன்மொழியப்பட்ட புதிய நகரத்தின் பல்வேறு மண்டலங்களை கை வண்ணம் பூசினார் [3].

1995 ஆம் ஆண்டு இவர் எழுதிய நம்பர் மொசைக்சு:சர்னீசு இன் சர்ச் ஆப் யுனிவர்சல்கள் என்ற புத்தகம் வெளியானது [4]. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி கங்கா சிட்னி நகரில் இறந்தார் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Visionary who helped create a city". The Sydney Morning Herald (in ஆங்கிலம்). 2013-04-29. பார்க்கப்பட்ட நாள் 2018-05-10.
  2. "Adi Kanga (1923-2013)" (PDF). zoroastriansnet. 2018-05-10. பார்க்கப்பட்ட நாள் 2018-05-10.
  3. 3.0 3.1 "The story of Adi R. Kanga". Parsi Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2018-05-10.
  4. 1923-, Kanga, A. R. (Adi R.) (1995). Number mosaics : journeys in search of universals. Singapore: World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9810218885. இணையக் கணினி நூலக மையம்:33052541. 

புற இணைப்புகள்[தொகு]

  • "Kanga, Adi". www.zoroastrian.org.uk. 2018-05-10. பார்க்கப்பட்ட நாள் 2018-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_கங்கா&oldid=2932857" இலிருந்து மீள்விக்கப்பட்டது