ஆதி இலங்கையில் இந்துமதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதி இலங்கையில் இந்துமதம் என்பது இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும், தொல்பொருள் ஆய்வாளருமான கா. இந்திரபாலா அவர்கள் எழுதிய ஒரு நூலாகும்.

நூல் விளக்கம்[தொகு]

இலங்கையில் பௌத்தம் தோன்றி வேரூன்றிப் பரவும் முன்னரே இலங்கை தீவில் சைவ சமயம் நிலைபெற்றிருந்தது என்பதனை விவரித்த எழுதப்பட்ட நூலாகும். இருப்பினும் ஆதி இலங்கையில் வாழ்ந்த சைவ சமயத்தவர், சைவ சமயக் கோயில்கள் பற்றிய இலக்கிய ஆதாரங்கள் பேணப்படாத நிலையில், தொல்பொருள் ஆய்வும் எல்லாவிடங்களிலும் முழுமையாக இதுவரை செய்யபாடாத நிலையில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை முன்வைத்து மட்டுமே நூல் எழுதப்பட்டுள்ளது என்பதை நூலாசிரியர் குறித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் சைவ சமயம் நிலைபெற்றிருந்தற்கான காரணிகளையும், அனுராதபுர அரசுகள் தோன்றிய காலம் தொடக்கம் மன்னர்களின் பெயர் வழங்கல் முறைகளை ஆய்வுசெய்து, பாளி மொழியில் செய்யுள் வடிவில் பாடப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் போன்ற நூல்கள் உட்பட பல செய்யுள்களை மேற்கோள் காட்டியும், கல்வெட்டுகளில் காணப்பட்ட வாசங்களைச் சான்றுகோள்களாக வழங்கியும் நூல் எழுதப்பட்டுள்ளது.

வெளியிணைப்பு[தொகு]