உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிவாசி மக்கள் கலைக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிவாசி மக்கள் கலைக் கழகம்
Adivasi Lok Kala Academy
உருவாக்கம்1980
வகைமண்டல கலாச்சார நிறுவனம்
நோக்கம்கல்வி, கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்
தலைமையகம்
வலைத்தளம்https://paramparaproject.org/institution_adivasi-lok-kala.html

ஆதிவாசி மக்கள் கலைக் கழகம் (Adivasi Lok Kala Academy) என்பது பழங்குடியினரின் கலைகளை ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் நோக்கத்துடன் 1980-ல் மத்தியப் பிரதேச அரசால் நிறுவப்பட்ட ஒரு கலாச்சார நிறுவனம் ஆகும்.[1]

இந்நிறுவனம் ஆதிவாசிகள் குறித்துக் கணக்கெடுப்புகளை நடத்துகிறது. மேலும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. பழங்குடி நாட்டுப்புறக் கலைகள் பற்றிய நூல்கள் மற்றும் பொருட்களை வெளியிடவும் செய்கிறது. பழங்குடியினக் கலைகள் மற்றும் நாட்டுப்புற நாடகங்கள் தொடர்பான பல விழாக்களையும் இது ஏற்பாடு செய்கிறது. முக்கியமாக நிகழ்வுகளாக லோக் ரங், ராம் லீலா மேளா, நிமாத் உத்சவ், சம்பதா மற்றும் ஷ்ருதி சமரோஹ் உள்ளன. இந்நிறுவனம் பழங்குடியினர் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் பற்றிய ஆதிவர்ட் அருங்காட்சியகத்தையும், ஓர்ச்சாவில் சாகேத், ராமாயண கலா அருங்காட்சியகத்தையும் நிறுவியுள்ளது. இந்நிறுவனம் சந்த் துளசிதாசர் - துளசி உற்சவம், துளசி ஜெயந்தி சமரோ மற்றும் மங்களாச்சரண் தொடர்பான விழாக்களையும் ஏற்பாடு செய்கிறது.[2][3]

நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்

[தொகு]

ஆதிவாசி மக்கள் கலைக் கழக அமைப்பின் தற்போதைய இயக்குநர் முனைவர் கபில் திவாரி ஆவார்.[4] சனவரி 2021-ல், இந்த அமைப்பு லோக்ரங் திருவிழாவை மாநில முதல்வரால் தொடங்கி நடத்தியது.[5] ஆதிவாசி மக்கள் கலைக் கழகம், பழங்குடியினரின் கலைகள், இலக்கியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய காலாண்டு ஆய்விதழை சௌமாசா என்ற பெயரில் வெளியிடுகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parampara Project | Adivasi Lok Kala [sic]". www.paramparaproject.org. Archived from the original on 2016-02-28. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
  2. "Department of Culture, Govt. Of M.P." Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2012-10-31.
  3. "Folk Dances - govt-of-mp-india". www.mp.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
  4. "Bhopal: Preserving the intangible heritage of humanity". freepressjournal. 27 January 2021. https://www.freepressjournal.in/bhopal/bhopal-preserving-the-intangible-heritage-of-humanity. 
  5. "Madhya Pradesh CM to inaugurate Lokrang Festival on January". Times of India. 24 January 2021. https://timesofindia.indiatimes.com/city/bhopal/madhya-pradesh-cm-to-inaugurate-lokrang-festival-on-january-26/articleshow/80431078.cms. 
  6. https://paramparaproject.org/institution_adivasi-lok-kala.html