ஆதிப்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
தோற்றம்
| இந்தியத் தொடருந்து நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | ஆதிப்பூர் காந்திதாம், குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 23°04′36″N 70°04′41″E / 23.076629°N 70.077944°E | ||||
| உரிமம் | இந்தியத் தொடருந்து அமைச்சகம்,இந்தியத் தொடருந்துகள் | ||||
| இயக்குபவர் | மேற்கு இரயில்வே (இந்தியா) | ||||
| தடங்கள் | காந்திதாம்–புஜ் பிரிவு | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரையில்) | ||||
| தரிப்பிடம் | இல்லை | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்படுகிறது | ||||
| நிலையக் குறியீடு | AI | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு மண்டலம் மேற்கு இரயில்வே (இந்தியா) | ||||
| கோட்டம்(கள்) | [[அகமதாபாத்து தொடருந்து கோட்டம்|அகமதாபாத்து]] | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
ஆதிப்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Adipur Junction railway station) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள கச்சு மாவட்டத்தில், மேற்கு இரயில்வே வலையமைப்பின் மேற்குப் பாதையில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1][2] ஆதிப்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம், புஜ் நகரத்திலிருந்து 49 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தொடருந்து மார்க்கமாக முந்திரா துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3][4][5]
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்
[தொகு]காந்திதாம் சந்திப்பு திசையை நோக்கிச் செல்லும்போது, காந்திதாம் தொடருந்து நிலையம் மிக அருகில் உள்ளது. அதேவேளையில், புஜ் திசையை நோக்கிச் செல்லும்போது, அஞ்சார் தொடருந்து நிலையம் மிக அருகில் அமைந்துள்ளது.
முக்கிய தொடருந்துகள்
[தொகு]பின்வரும் தொடருந்துகள் ஆதிப்பூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன:
- 19115/16 சயாஜிநகரி விரைவுவண்டி
- 22955/56 கச்சு விரைவுவண்டி
- 14321/22 அலா ஹசரத் விரைவுவண்டி (பில்டி வழியாக)
- 14311/12 அலா ஹசரத் விரைவுவண்டி (அகமதாபாத் வழியாக)
- 11091/92 புஜ்–புனே விரைவு வண்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Adipur Junction Railway Station (AI) : Station Code, Time Table, Map, Enquiry". India: NDTV. Retrieved 2019-01-06.
- ↑ "AI/Adipur Junction". India Rail Info.
- ↑ "MPSEZ commences doubling of 57 km Mundra Port-Adipur private railway line". NDTV.
- ↑ "AI:Passenger Amenities Details As on : 31/03/2018 Division : Ahmedabad". Raildrishti.
- ↑ "AI/Adipur Junction:Timetable". Raildrishti.