ஆதித்யா கத்வி
| ஆதித்யா கத்வி | |
|---|---|
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் | |
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | ஆதித்யா கத்வி |
| பிறப்பு | 3 ஏப்ரல் 1994 குசராத்து, இந்தியா |
| இசைத்துறையில் | 2004 |
ஆதித்யா கத்வி (Aditya Gadhvi) என்பவர் இந்தியாவில் அமைந்துள்ள குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பின்னணிப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் பல்வேறு இந்திய மொழிகளில், ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் குசராத்தித் திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளார். மேலும் பல தனிப்பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.[1] இவரது பாடல்களில் 'கலாசி' 'ரங் மோர்லா' 'குஜராத் டைட்டன்சு' அணியின் கீதமான 'ஆவா தே' ஆகியன குறிப்பிடத்தகுந்தனவாகும்.[2][3][4][5]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கத்வி, குசராத்து மாநிலத்தில், ஒரு குசராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை யோகேசு கத்வி ஆவார். இவர் குசராத்தி மற்றும் இந்தி மொழிகளைச் சரளமாகப் பேச தெரிந்தவராவார்.
தொழில் வாழ்க்கை
[தொகு]இவர், குசராத்தி நாட்டுப்புற மற்றும் சூபி இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2014-ஆம் ஆண்டில், காமசூத்ரா 3 டி திரைப்படத்தில் கத்வி பாடிய இரண்டு பாடல்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தன.[6][7][8] மேலும், குசராத் தொலைக்காட்சியில் அதிகபட்ச பார்வையாளர் மதிப்பீட்டைப் பெற்ற நிகழ்ச்சியான லோக் காயாக் குசராத்து என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது 18-வது வயதிலேயே வெற்றி பெற்றார். லோக் காயாக் குசராத்து நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கத்வி குசராத்து மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, ஆங்காங்கிலும் குசராத்தி நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். சனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், குசராத் மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் இவர் பின்னணிக் குரல் கொடுத்தார்.[9] இந்த அணிவகுப்பு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆயிரக்கணக்கான பிற விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. துபாய், வதோதரா போன்ற நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர். ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சிகளில், பின்னணிப் பாடகராக இணைந்து இவர் பாடியுள்ளார்.[10] பாலிவுட் திரைப்படமான லெகர் கம் தீவானே தில் இல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து கத்வி பணியாற்றியுள்ளார்.[11][12]
2023 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரின் போது, நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக, குசராத் டைட்டன்ஸ் அணியின் கீதமான 'ஆவா தே' பாடலை ஆதித்யா பாடினார்.[13] கத்வி, அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச நேரலை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாடியுள்ளார்.[14][15]சமீபத்தில் தொடங்கப்பட்ட 'கோக் ஸ்டுடியோ பாரத்' (Coke Studio Bharat) நிகழ்ச்சியிலும் இவர் இடம்பெற உள்ளார்.[16]
இவர் 'சரதோ லகு', 'எல்லாரோ' மற்றும் 'லவ் நி பாவாய்' போன்ற பல வெற்றிகளுக்காக பிரபலமானவர்.[11] பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நவராத்ரா விழாவில் "டக்லா" பாடலை பாடியபோது காத்வியின் பாடலுக்கு தண்டியா பாடியுள்ளார்.[17][18]
பிரதமர் காலாசி என்ற இவரின் பிரபலமான பாடலையும், ஆதித்யா கத்வியையும் பாராட்டினார். 2023 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் கோக் ஸ்டுடியோ பாரத்தில் வெளியிட்ட இந்தப் பாடல், மிக விரைவிலேயே பெரும் புகழைப் இவருக்கு பெற்றது. ஆதித்யா கத்வி முதல் சந்திப்பைக் குறிப்பிட்டுப் பதிவிட்ட ஒரு பதிவை, பிரதமர் மறுபதிவு செய்தார். இப்பதிவின் மூலம் இவர் மீதும் இப்பாடல் மீதும் தான் கொண்டுள்ள பாராட்டை பிரதமர் வெளிப்படுத்தினார்.[2]
சர்வதேச மேடை நிகழ்ச்சிகள்
[தொகு]கத்வி, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச நேரலை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் அங்கு வாழும் இந்தியப் புலம்பெயர் சமூகத்தினருக்கு குசராத்தி நாட்டுப்புற மற்றும் சமகால இசையை வழங்கியுள்ளார். வட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள், கலாச்சாரத் திருவிழாக்கள் மற்றும் 'கர்பா' நிகழ்வுகள் ஆகியவை இவரது வெளிநாட்டுப் பயணங்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்தன.[19][20]
சாதனைகள் மற்றும் விருதுகள்
[தொகு]சிறந்த பாரம்பரிய நாட்டுப்புறப் பாடலுக்கான குளோபல் இந்தியன் மியூசிக் அகாடமி விருது பெற்றுள்ளார் 2014 ஆம் ஆண்டில் ஆசுகர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட காமசூத்ரா 3டி திரைப்படத்தில் இவர் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aditya Gadhvi shoots a music video for his next folk song". The Times of India (in ஆங்கிலம்). 18 July 2018. Retrieved 2020-01-21.
- ↑ 2.0 2.1 "PM Modi says 'Khalasi' is 'topping the charts', praises singer Aditya Gadhvi". India Today (in ஆங்கிலம்). 3 November 2023. Retrieved 2023-11-03.
- ↑ "Watch: Gujarat Titans release anthem 'Aava de'". The Indian Express (in ஆங்கிலம்). 2022-03-25. Retrieved 2023-06-19.
- ↑ "Aditya Gadhvi records two new songs". The Times of India (in ஆங்கிலம்). 10 August 2018. Retrieved 2020-01-21.
- ↑ Mishra, Abhimanyu (13 August 2020). "Aditya Gadhavi releases a special song for Independence Day". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/gujarati/music/aditya-gadhavi-releases-a-special-song-for-independence-day/articleshow/77527490.cms.
- ↑ "Gujarati boy's songs shortlisted for Oscars in best original song category". dailybhaskar (in ஆங்கிலம்). 2013-12-23. Archived from the original on 1 July 2017. Retrieved 2020-01-21.
- ↑ Patel, Dilip (23 December 2013). "City boy's songs in Oscars shortlist". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). Retrieved 2020-01-21.
- ↑ "Aditya Gadhvi records a song for a Hindi GEC". The Times of India (in ஆங்கிலம்). 11 November 2018. Retrieved 2020-01-21.
- ↑ "This Sharad Purnima, dance the Garba to Aditya Gadhvi's tunes under the moonlight". Creative Yatra (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-01-21.
- ↑ "Photo Aditya Gadhvi shares the stage with AR Rahman for a live show". NewsJizz (in ஆங்கிலம்). Retrieved 2020-01-21.
- ↑ 11.0 11.1 "Photo: Aditya Gadhvi shares the stage with AR Rahman for a live show". The Times of India (in ஆங்கிலம்). 17 January 2020. Retrieved 2020-01-21.
- ↑ "Aditya Gadhvi's new single releases today". The Times of India (in ஆங்கிலம்). 27 August 2018. Retrieved 2020-01-21.
- ↑ "IPL 2023: Singer Aditya Gadhvi To Perform Ahead of GT vs KKR Match in Ahmedabad". LatestLY (in ஆங்கிலம்). 2023-04-08. Retrieved 2023-06-19.
- ↑ "Watch! Popular singer Aditya Gadhvi enjoys the breath-taking beauty of Niagara Falls". The Times of India. 2022-10-14. https://timesofindia.indiatimes.com/entertainment/gujarati/music/watch-popular-singer-aditya-gadhvi-enjoys-the-breath-taking-beauty-of-niagara-falls/articleshow/94854410.cms.
- ↑ "Aditya Gadhvi returns to India post his International shows". The Times of India. 2022-10-21. https://timesofindia.indiatimes.com/entertainment/gujarati/music/aditya-gadhvi-returns-to-india-post-his-international-shows/articleshow/95005741.cms.
- ↑ "Coca-Cola India launches Coke Studio Bharat". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). 2023-02-02. Retrieved 2023-06-19.
- ↑ "Aditya Gadhavi: I was shocked to see Priyanka performing dandiya to my songs". The Times of India (in ஆங்கிலம்). October 2019. Retrieved 2020-01-21.
- ↑ "Rachintan Trivedi is known for his art-infused music". News Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-28. Retrieved 2020-01-21.
- ↑ "Aditya Gadhvi returns to India post his international shows". The Times of India.
- ↑ "Aditya Gadhvi – Performer Profile". AllEvents.
வெளி இணைப்புகள்
[தொகு]- Aditya Gadhvi on [Facebook]
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆதித்யா கத்வி
- Aditya Gadhvi at [Instagram]
- 1994 பிறப்புகள்
- தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
- கன்னடத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
- வாழும் மக்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- இந்திய நாட்டுப்புறப் பாடகர்கள்
- இந்தித் திரைப்படத்துறை
- இந்தியத் திரைப்படப் பாடகர்கள்
- மொழி வாரியாக இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
- மாவட்ட வாரியாக குஜராத் மக்கள்
- சுரேந்திரநகர் மாவட்டம்