ஆதித்தியா மியூசிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்தியா மியூசிக்கு இந்தியா தனியார் வரையறுக்கப்பட்டது
வகைபொது
தலைமையகம்ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுதும்
முதன்மை நபர்கள்உமேசு குத்தா (அவைத்தலைவர்)[1]
தொழில்துறைஇசை மகிழ்கலை
உற்பத்திகள்ஒலிப்பேழைகள், குறுந்தகடுகள், காணொளிக் குறுந்தகடுகள் இலக்கமுறைப் பல் திறவாற்றல் வட்டுகள், நீலக்கதிர் வட்டு
துணை நிறுவனங்கள்சங்கீத்து சாகர்[2]
இணையத்தளம்http://www.adityamusicindia.com/

ஆதித்தியா மியூசிக்கு இந்தியா தனியார் வரையறுக்கப்பட்டது (Aditya Music India Private Limited) என்பது ஓர் இந்திய இசை நிறுவனம் ஆகும்.[3] தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாள இசைத்தொகுப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.[2] இதன் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது.[4][5]

வரலாறு[தொகு]

ஆதித்தியா மியூசிக்கானது 1990களின் பிற்பகுதியில், தற்போது இதன் அவைத்தலைவராக உள்ள உமேசு குத்தாவால் நிறுவப்பட்டது.[1][2] இந்நிறுவனமானது 1996ஆம் ஆண்டு வரையில் ஏனைய இசை நிறுவனங்களின் இசைத் தொகுப்புகளை ஆந்திரப் பிரதேசத்தில் வழங்கி வந்தது.[2] இதன் பின்னர், சொந்த இசை உரிமங்களைப் பெற்று இசைத் தொகுப்புகளை வெளியிடத் தொடங்கியது.[2] 2000இல் ஒலிப்பேழைகளை உருவாக்குவதற்கான நிலையத்தையும் அமைத்துக் கொண்டது.[2]

ஆந்திரத் திரைப்படத்துறையின் பெரும்பாலான திரைப்படங்களுக்கான இசை உரிமங்கள் ஆதித்தியா மியூசிக்கிடம் உள்ளன.[2] சிவா மியூசிக்கல்சு, இலியோ, மாருதி மியூசிக்கு, எக்கோ, சோகன் மியூசிக்கு, சுப்பிரீம், பிரமிடு ஆடியோ போன்ற நிறுவனங்களின் இசை உரிமங்களையும் ஆதித்தியா மியூசிக்கு பெற்றுள்ளது.[2] போனோகிறாபிக்கு பெருபோமன்சு வரையறுக்கப்பட்டது இந்தியாவிலும் இந்திய ஆற்றுகை உரிமக் குமுகத்திலும் (ஐ. பி. ஆர். எசு.) இந்நிறுவனம் உறுப்பினராக உள்ளது.[6]

வெளியிட்ட தமிழ் இசைத் தொகுப்புகள்[தொகு]

ஆண்டு இசைத் தொகுப்பு இசையமைப்பாளர்
1996 இலவு பேட்சு ஏ. ஆர். இரகுமான்
1997 சூர்ய வமிசம் எசு. ஏ. இராச்சுகுமார்
1998 காதலா! காதலா! கார்த்திக்கு இராசா
1998 உயிரோடு உயிராக வித்தியாசாகர்
1999 என்றென்றும் காதல் மனோச்சு
2000 பதிரி இரமணா கோகுலா
2002 கிங்கு தீனா
2006 இரெண்டு தி. இமான்
2008 மந்திரா ஆனந்து
2012 மறந்தேன் மன்னித்தேன் இளையராசா
2012 முரட்டு சிங்கம் எசு. தமன்
2012 இராம் சரண் ஆரிசு சயராசு
2013 இலவு தோரி எசு. தமன்
2013 சமீன் செல்வ கணேசு
2014 கார்த்திகேயன் சேகர் சந்திரா
2015 சகலகலாவல்லவன் அப்பாடக்கர் எசு. தமன்
2015 செல்வந்தன் தேவி சிறீ பிரசாது

[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BVS Prakash (21 ஆகத்து 2015). "Tiff between producers, audio firms". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Aditya Music to venture into Tamil Industry". Indiaglitz. 19 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Riddhi Mukherjee (30 அக்டோபர் 2014). "Believe Digital signs up with Aditya Music for global distribution of its regional content". MediaNama. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2015.
  4. "Aditya Music". Aditya Music. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2015.
  5. "Aditya Music". Saavn. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2015.
  6. "Members-Publishers". The Indian Performing Right Society Limited. Archived from the original on 2015-08-20. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2015.
  7. "Aditya Music". Saavn. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தியா_மியூசிக்கு&oldid=3927440" இலிருந்து மீள்விக்கப்பட்டது