ஆதிச்சிற்றம்பலக் கவிராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் (மிதிலைப்பட்டி, 17 ஆம் நூற்றாண்டு) எனப்படுவர் 20 மேற்பட்ட நூல்களை எழுதிய கவிராயர். பிற புலவர்களை வாதிட்டு வென்றவர். மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் மரபில் மூத்தவராக இவர் கருதப்படுகிறார்.[1]

ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் ஆட்சியாளர்களைப் பாடி ஊர்கள் உட்பட பல பரிசில்கள் பெற்றார். தானும் பரிசில்களை வழங்கினார். இவ்வாறு இவர் வெங்களப் நாயக்கரைப் பாடிப் பெற்றதே மிதிலைப்பட்டி ஊரைப் பெற்றார்.[1]

படைப்புகள்[தொகு]

  • ஆண்டவராயன் கோவை
  • ஆண்டவராயன் கட்டளைக்கலிப்பா
  • ஆண்டவராயன் விருத்தம்
  • ஆண்டவராயன் கட்டளைக்கலித்துறை
  • ஆண்டவராயன் மீது கொக்சகங்கள்
  • ஆண்டவராயன் மகன் குழந்தைத்துரை மீது பலகவி
  • ஆண்டவராயன் வண்ணம்
  • ஆண்டவராயன் விருத்தம்
  • மூவரையன் வண்ணம்
  • மூவரையன் விறலிவிடுதூது
  • சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ்
  • மருங்காபுரி வீரப்பூச்சய நாயக்கர் கோவை
  • மருங்காபுரி வீரப்பூச்சய நாயக்கர் பிள்ளைத்தமிழ்
  • தேவைக்கோவை
  • பெருந்துரை ஆன்மநாதர் யமக அந்தாதி
  • பிரான்மலை மங்கைபகாக் கடவுள் விருத்தம்
  • பிரான்மலைப்புராணம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 முனைவர் எம். எஸ். சிறீலக்சுமி. (2009). மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் வாழ்வும் வாக்கும். சிங்கப்பூர்: தருமு பதிப்பகம்.