ஆதாமிண்டெ மகன் அபூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆதாமின்டே மகன் அபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆதாமிண்டெ மகன் அபூ
சலீம் குமார் தோன்றும் திரைப்பட சுவரொட்டி
இயக்குனர்சலீம் அகமது
தயாரிப்பாளர்சலீம் அகமது
அசராஃப் பேடி
கதைசலீம் அகமது
இசையமைப்புபி ன்னணி இசை:
ஐசக் தாமஸ் கோட்டுகாப்பள்ளி
பாடல்கள்:
ரமேஷ் நாராயண்
நடிப்புசலீம் குமார்
சரீனா வகாப்
முகேஷ்
நெடுமுடி வேணு
கலாபவன் மணி
சூரஜ் வெஞ்சிரமூடு
ஒளிப்பதிவுமது அம்பாட்
படத்தொகுப்புவிஜய் சங்கர்
கலையகம்ஆலென்ஸ் மீடியா
விநியோகம்லாஃபிங் வில்லா
கலாசங்கம்
வழியோ
ஆலென்ஸ் மீடிய
காஸ்
மஞ்சுநாதா
வெளியீடுசூன் 24, 2011 (2011-06-24)[1]
கால நீளம்101 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிமலையாளம்
ஆக்கச்செலவுIndian Rupee symbol.svg1.5 கோடிகள்[2]

ஆதாமிண்டெ மகன் அபூ (மலையாளம்: ആദാമിന്റെ മകൻ അബു, தமிழ்: ஆதாமின் மகன் அபூ) 2011ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படமாகும். முதன்முதலாக திரைப்படத்துறையில் இணைதயாரிப்பாளராக களமிறங்கிய சலீம் அகமது எழுதி இயக்கிய இந்தத் திரைப்படம் அத்தர் விற்கும் அபுவின் ஹஜ் செல்வதற்கான விழைவைச் சுற்றி அமைக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் சலீம் குமார், சரீனா வகாப் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பிடும்படியான வேடங்களில் நெடுமுடி வேணு, முகேஷ், கலாபவன் மணி, சூரஜ் வெஞ்சரமூடு ஆகிய முன்னணி மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்படக்கருவியை மது அம்பட் இயக்கியுள்ளார். விஜய் சங்கர் திரைப்படத்தைத் தொகுத்துள்ளார். ரமேஷ் நாராயண் பாடல்களுக்கு இசையமைக்க ஐசக் தாமஸ் கோட்டுகாபள்ளி பின்னணி இசை வழங்கியுள்ளார்.

திரைக்கதை அத்தர் விற்றுப் பிழைக்கும் அபு ஹஜ் செல்வதற்கு மிகவும் முயன்று இறுதியில் செலவிற்கு வருகின்ற பணம் நல்வழியில் வரவில்லை என்று அச்சப்பட்டு கடைசி நேரத்தில் செல்வதைத் தவிர்ப்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது. இத்திரைக்கதை பத்தாண்டுகளுக்கும் மேலாக சலீமின் சிந்தனையில் மேம்பட்டு வந்துள்ளது. நவம்பர் 7, 2010 முதல் கோழிக்கோட்டிலும் திருச்சூரிலும் ஒரு மாத காலத்தில் இலக்கமுறை ஒளிப்படக்கருவி மூலம் படமாக்கப்பட்டது.

திரையரங்குகளில் சூன் 24, 2011 அன்று வெளியிடப்பட்டது. 58வது தேசியத் திரைப்படவிழாவில் நான்கு தேசிய விருதுகளை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய துறைகளில் பெற்றுள்ளது. இதே போன்று கேரள மாநில திரைப்பட விருதுகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் சார்பில் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாமிண்டெ_மகன்_அபூ&oldid=2760686" இருந்து மீள்விக்கப்பட்டது