ஆதம் கோசாக்கு
ஆதம் கோசாக்கு Ádám Kozák | |
---|---|
![]() 2019 ஆம் ஆண்டு ரேடன்சியில் ஆதம் கோசாக்கு . | |
நாடு | அங்கேரி |
பிறப்பு | 15 சூன் 2002 புடாபெசுட்டு, அங்கேரி |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2020) |
பிடே தரவுகோள் | 2526 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2610 (ஏப்ரல் 2024) |
ஆதம் கோசாக்கு (Ádám Kozák) அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் அங்கேரி நாட்டின் சார்பாக இவரும் போட்டியிட்டார்.
சதுரங்க வாழ்க்கை
[தொகு]எசுத்தோனியா நாட்டின் மிகப்பெரிய நகரமான தாலின் நகரத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ஐரோப்பிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விரைவு சதுரங்கப் போட்டியில் இவர் வெற்றி பெற்றார். இதே போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மின்னல் வேகப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றார். 2020 ஆம் ஆண்டில் இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இளம் வயதில் கிராண்டுமாசுட்டர் பெற்ற அங்கேரியர் என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்தது.[1][2]
2021 ஆம் ஆண்டிற்கான சதுரங்க உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற ஐரோப்பிய கலப்பு தகுதி சதுரங்கப் போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஐரோப்பிய வீரர்களில் இவரும் ஒருவர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Youngest Hungarian Chess Grand-master Wins U-18 Blitz Chess European Championship". Hungary Today (in ஆங்கிலம்). 2019-12-04. Retrieved 2021-07-08.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kozak, Adam". ratings.fide.com. Retrieved 2021-07-08.
- ↑ nikita (30 May 2021). "36 European players qualified for FIDE World Chess Cup 2021 – Chessdom" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-08.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆதம் கோசாக்கு rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- ஆதம் கோசாக்கு player profile and games at Chessgames.com
- Ádám Kozák chess games at 365Chess.com