ஆதம்பாக்கம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதம்பாக்கம் ஏரி (Adambakkam lake) இந்தியாவின் சென்னை மாவட்டத்தில் இருக்கும் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் அமைந்திருக்கின்ற ஓர் ஏரியாகும். ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள காரணத்தினால் ஏரிக்கு இப்பெயர் வந்துள்ளது. சென்னையின் பருவக்காற்றுக் காலத்தில் பொழியும் மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்த ஏரியைத்தான் வந்தடைகிறது. எனவே சென்னை மாவட்டத்திலுள்ள மற்ற ஏரிகளைப் போல ஆதம்பாக்கம் ஏரியும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏரியிலும் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகரிக்கும் ஆகாயத்தாமரைகளின் ஆக்ரமிப்பு இப்பகுதி மக்களுக்கு ஒரு பெரும் கவலையாக உருவெடுக்கிறது. ஏனெனில் வெள்ளப்பெருக்கினால் வரும் நீரின் அளவில் சிறுபகுதி இங்கு தேங்கிவிடுகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதம்பாக்கம்_ஏரி&oldid=3232813" இருந்து மீள்விக்கப்பட்டது