ஆதன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதன்
ஆதன் ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகராட்டிரம்
மாவட்டம்வாசிம் மாவட்டம்
நகரம்கரஞ்சா லாட்
சிறப்புக்கூறுகள்
மூலம்கரஞ்சா லாட், வாசிம் மாவட்டம்
 ⁃ அமைவுமகராட்டிரம், இந்தியா
நீளம்209.21[1] km (130.00 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுமுகத்துவாரம்
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுஅருணாவதி ஆறு

ஆதன் ஆறு (ஆங்கிலம்: Adan River; மராத்தி: अडाण नदी) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள வாசிம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது பைங்காங்கா ஆற்றின் முக்கிய துணை நதியாகும் .

நிலவியல்[தொகு]

ஆதன் ஆறு மகாராட்டிராவின் வாசிம் மாவட்டத்தில் உருவாகிறது. இது அருணாவதி ஆறு பைங்கங்கா ஆற்றில் சேருவதற்கு சுமார் 13 கிலோமீட்டர் முன்னதாக ஆதன் ஆற்றுடன் இணைகிறது. கோடையில் ஆறு வறண்டுவிடுவதால், இதன் போக்கில் குளங்கள் போன்று ஆங்காங்கே காணப்படும்.

ஆதனில் இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன; ஒன்று சோனாலா கிராமத்திற்கு அருகிலும் மற்றொன்று வாசிம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சா லாட் நகருக்கு அருகிலும் உள்ளது. இதன் பின்னர் ஆறு புதர்க்கடு வழியாகப் பாய்கிறது.

ஆதன் அணை 1977இல் 13 வாசிம் மாவட்டத்தில் கரஞ்சா லாட் அருகே கட்டப்பட்டது. ஆதன் ஆறு பைனாங்காவை சந்திக்கும் இடத்திலிருந்து 13 கி. மீ. தொலைவில் இந்த அணை உள்ளது.[1]

ஆதன் அணையின் சுற்றுச்சூழல் பாதிப்பு[தொகு]

2008 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆதன் அணையின் நீர் வாழ் பல்லுயிர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மீன்பிடி சமூகங்களின் சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய இரண்டு தனித்தனி அறிக்கைகள் வெளியாகியுள்ளது.[1][2]

  • மீன்பிடி சமூகங்கள் மீதான விளைவு: புதிய நீர்த்தேக்கம் காரணமாக பல இடங்களில் நீர் மட்டம் குறைந்ததால் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்க முடியாத சூழ்நிலை உள்ளூர் மீனவர்களுக்கு ஆற்றின் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. அணையின் கட்டுமானம் அதிக அளவு வண்டல் மற்றும் நீர் வாழ்த் தாவரங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த மாற்றங்கள் உள்ளூர் போய் மக்கள் தங்களுடைய நிலையான, பாரம்பரிய மீன்பிடி நுட்பங்களைக் குறைவாக நம்புவதற்கு வழிவகுத்தது.
  • நீர் வாழ் சுற்றுச்சூழல் அமைப்பு மீதான விளைவு: அணை கட்டப்பட்டதிலிருந்து மீன்களின் பன்முகத்தன்மை மற்றும் மீன்களின் எண்ணிக்கை மிகுதியாகக் குறைந்துள்ளது. அணையைச் சுற்றியுள்ள ஆற்றின் பகுதியிலிருந்து சில வகை மீன்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன (அதாவது இயூற்றோபிய்ச்சிசு வச்சா, அங்குயில்லா பெங்கலென்சிசு பெங்காலென்சிசு, பேரிலியசு இனங்கள், டோர் குத்ரீ, டோர் முசுல்லா மற்றும் கோனோபிரோட்டோபுடெரசு கோலசு). மீன் இனங்கள், நீர்நாய்கள் மற்றும் ஆமைகளும் அழிக்கப்பட்டதை உள்ளூர் பெரியவர்கள் கவனித்ததாக அறிக்கைத் தெரிவிக்கிறது.

உள்ளூர் மக்கள்[தொகு]

உள்ளூர் போய் மக்கள் ஆற்றின் கரையில் மீன்பிடி சமூகங்களாக வாழ்கின்றனர். போய்கள் பாரம்பரியமாக உணவுக்காக ஆதனைச் சார்ந்து இருக்கிறார்கள். எனவே மீன் வளம் குறைந்து வருவதால் இவர்களின் பாரம்பரிய வாழ்க்கை ஆபத்தில் உள்ளது.[1]

ஆதன் நதியில் போய் மக்கள்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

{{Reflist}

  1. 1.0 1.1 1.2 1.3 Heda, Nilesh (2012-08-01). "'How our river changed in front of our eyes': Impacts of Adan Dam on Fisheries in Maharashtra" (PDF). South Asia Network on Dams, Rivers and People. Archived from the original (PDF) on 24 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
  2. Heda, Nilesh (2008-09-18). "Conservation of Riverine Resources through People's Participation: North-Eastern Godavari Basin, Maharashtra, India" (PDF). The Rufford Foundation. Samvardhan Samaj Vikas Sanstha, Karanja (Lad). Archived from the original (PDF) on 2016-11-14. பார்க்கப்பட்ட நாள் 2016-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதன்_ஆறு&oldid=3784260" இலிருந்து மீள்விக்கப்பட்டது