ஆண்ட்ரூ பால்பிர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்ட்ரூ பால்பிர்னி
Andrew Balbirnie
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கைப் புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்ட வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 1)11 மே 2018 எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு24 சூலை 2019 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 35)5 சூலை 2010 எ இசுக்காட்லாந்து
கடைசி ஒநாப7 சூலை 2019 எ சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 35)19 சூன் 2015 எ இசுக்காட்லாந்து
கடைசி இ20ப12 சூலை 2019 எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–2015மிடில்செக்சு அணி (squad no. 15)
2011–2013கார்டிஃப் அணி
2013–இன்றுலைன்சுட்டர் லைட்னிங்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 3 64 28 91
ஓட்டங்கள் 146 1,813 1,213 2,927
மட்டையாட்ட சராசரி 24.33 31.80 32.78 37.05
100கள்/50கள் 0/2 5/8 2/7 9/12
அதியுயர் ஓட்டம் 82 145* 205* 205*
வீசிய பந்துகள் 60 609 96
வீழ்த்தல்கள் 2 13 2
பந்துவீச்சு சராசரி 34.00 18.84 56.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/26 4/23 1/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 20/– 25/– 28/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, சூலை 27 2019

ஆன்ட்ரூ பால்பீர்னி (Andrew Balbirnie, பிறப்பு: டிசம்பர் 28, 1990) ஒரு அயர்லாந்துத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை மட்டையாளர். அயர்லாந்து அணியின் ஒரு குச்சக் காப்பாளர் ஆவார். டப்ளினில் பிறந்த இவர் புனித ஆண்ட்ரூ கல்லூரியில் கல்வி பயின்றார்.[1] மே 2018 இல் பாக்கித்தானுக்கு எதிரான அயர்லாந்தின் முதல் தேர்வுப் போட்டியில் விளையாடிய பதினொரு வீரர்களில் பால்பிர்னியும் ஒருவராக இருந்தார். டிசம்பர் 2018 இல், அயர்லாந்துத் துடுப்பாட்ட வாரியத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்ட பத்தொன்பது வீரர்களில் ஒருவராக இருந்தார்.[2] [3]

பன்னாட்டு விளையாட்டுகளில்[தொகு]

இவர் இசுக்காட்லாந்திற்கு எதிராக தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியை சந்தித்தார். அவர் இத்தொடரில் மேலும் மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடினார்.[4]

2015 சூன் 19 அன்று இசுக்காட்லாந்துக்கு எதிரான இருபது20 போட்டியில் அறிமுகமானார். எனினும் அப்போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.[5]

சனவரி 2019 இல், இந்தியாவின் தேராதூனில் ஆப்கானித்தானுக்கு எதிராக அயர்லாந்து விளையாடிய தேர்வுப் போட்டி அணியில் அவர் இடம் பெற்றார்.[6] [7] மே 2019 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2019 அயர்லாந்து முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டம், பல்பீர்னியின் 100 வது சர்வதேச போட்டியாக அமைந்தது.[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Andrew Balbirnie at ESPNcricinfo
  • Andrew Balbirnie at CricketArchive (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_பால்பிர்னி&oldid=3542503" இருந்து மீள்விக்கப்பட்டது