ஆண்டியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டியூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
வட்டம்ஊத்தங்கரை
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,979
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635652

ஆண்டியூர் (ANDIYUR) என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில், எக்கூர் கிராம ஊராட்சியில் உள்ள ஊராகும்[1].

அமைவிடம்[தொகு]

திருப்பத்தூர்-திருவண்ணாமலைச் சாலையில் அமைந்துள்ள இந்த ஊரானது, ஊத்தங்கரையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 231 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இச்சிற்றூர் நான்கு பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அவை உடையார் தெரு, கோனார் குட்டை, எம்.ஜி.ஆர் நகர் ஆகியவையாகும். இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சுற்றுப்புறமுள்ள அனைத்து ஊர்களுக்கும் பேருந்துவசதி உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

வரலாறு[தொகு]

கி.பி.1300களில் இப்பகுதி காடுகள் அடர்ந்த பகுதியாக சித்தர்கள் வாழும் பகுதியாக இருந்தது. இதனால் சித்த மடம் என்றபெயரில் அழைக்கப்பட்டுவந்தது.பிறகு அதுவே ஆண்டிமடம் என்றானது. அதுவும் பிற்காலத்தில் ஆண்டியூர் என்று பெயர் மாறியது[சான்று தேவை].

மக்கள் வகைப்பாடு[தொகு]

கிட்டதட்ட 353 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தில் 2001 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி ஆண்டியூரின் மக்கள் தொகை 1979 ஆகும். இதில் ஆண்கள் 1007பேர் பெண்கள் 972பேர் ஆவர்.[2] 2001 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின் போது இவ்வூர் தர்மபுரி மாவட்டத்தில் இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் 2004வரை உருவாக்கப்படவில்லை.[3] 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 353 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1411 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 705, பெண்களின் எண்ணிக்கை 706 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 63.6% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டியூர்&oldid=2734837" இருந்து மீள்விக்கப்பட்டது