ஆண்டிமோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேதியியலில் ஆண்டிமோனைட்டு ( Antimonite) என்பது ஆண்டிமனி(III) வகை உப்புகளைக் குறிக்கிறது. NaSb(OH)4 மற்றும் NaSbO2 போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும். ஆண்டிமனி மூவாக்சைடுடன் (Sb2O3) ஒரு காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக இவற்றைத் தயாரிக்கலாம்[1]. ஆண்டிமோனசு அமிலம் அல்லது ஆண்டிமோனியசு அமிலத்தின் உப்புகள் என்று பொதுவாக இவை கருதப்படுகின்றன[2]. கரைசலில் "Sb(OH)3" இன் இருப்பு சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. இதைத் தனிமைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது பொதுவாக ஆண்டிமனி(III) ஆக்சைடு நீரேற்று உருவாகிறது. Sb2O3•xH2O என்ற பொதுவாய்ப்பாட்டுடன் உருவாகும் இந்த நீரேற்று பின்னர் மெதுவாக Sb2O3.ஆக நிலைமாறுகிறது[1].

புவியியலில், சிடிப்னைட்டு கனிமம் (Sb2S3) சிலசமயங்களில் ஆண்டிமோனைட்டு என்று அழைக்கப்படுகிறது.

இவற்றை ஆண்டிமோனேட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவியலும். இவ்வகைச் சேர்மங்களில் ஆண்டிமனி +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier ISBN 0-12-352651-5
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமோனைட்டு&oldid=3353083" இருந்து மீள்விக்கப்பட்டது