ஆண்டிமனி கசடுலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டிமனி கசடுலோகம் (Antimony regulus) என்பது ஆண்டிமனி தனிமத்தின் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட ஒரு வடிவமாகும். 0.4 சதவீதம் முதல் 1.0 சதவீதம் வரை மாசுக்களைக் கொண்ட ஆண்டிமனியை ஆண்டிமனி கசடுலோகம் என்கிறது நவீன வரையறை. ஆர்சனிக்கு, பெருமளவிலும் கந்தகம், துத்தநாகம், இரும்பு போன்ற உலோகங்கள் சிறிய அளவிலும் இம்மாசுவில் கலந்திருக்கும். செலீனியம் ஓரு மாசாகச் சேர்ந்திருந்திருப்பது அரிதானதாகும். சில காரணங்களுக்காக செலீனியம் கலந்திருப்பதை தவிர்ப்பதும் அவசியமானதாகும். தாமிரம், நிக்கல், ஈயம் போன்ற உலோகங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக அனுமதிக்கப்படுகின்றன. [1]

வழக்கமான வர்த்தக முறை தயாரிப்பு ஆண்டிமனி திண்ம-நிலை-மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கு பொருத்தமற்றதாகும். 99.95% தூய ஆண்டிமனி இத்தயாரிப்புகளுக்கு பொதுவாக கோரப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Antimony and Antimony Alloys", by Werner Joseph, pp. 370-372, in Encyclopedia of Chemical Processing and Design, John J. McKetta et al., eds.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_கசடுலோகம்&oldid=3075653" இலிருந்து மீள்விக்கப்பட்டது