ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக்கலைஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2009 முதல் 2014 வரை வெற்றி பெற்ற படங்களின் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டு்ள்ளது.

ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக்கலைஞர் (Astronomy Photographer of the Year) என்பது சிறந்த வானியல் புகைப்படத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் விருதாகும். சர்வதேச வானியல் ஆண்டாக [1] கொண்டாடப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. விண்மீனொளிகள், அண்டங்கள் போன்ற எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றுடன் புதுமுக புகைப்படக் கலைஞருக்கான சர் பாட்ரிக் மூர் பரிசு, ஆண்டின் சிறந்த ரோபோட்டிக் பயன்பாட்டுப் படம் .[2] முதலான இரண்டு சிறப்புப் பரிசுகளும் கூடுதலாக போட்டியில் பங்கேற்கும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் ஒரு பரிசும் வழங்கப்படுகின்றன[3]

கிரீன்விச்சில் இராயல் வானாய்வகத்தை இயக்கி வரும் தேசிய கடல்சார் அருங்காட்சியகம் இப்போட்டியை நடத்துகிறது. பிபிசியின் “ இரவு நேரத்தில் வானம்” என்னும் தொலக்காட்சி நிகழ்ச்சியும் நியூயார்க் மெலான் வங்கியின் இன்சைட் முதலீட்டு நிறுவனமும் புரவலர்களாக இப்போட்டிக்கு ஆதரவு அளிக்கின்றனர். தற்பொழுது ஆண்டின் சிறந்த இன்சைட் வானியல் புகைப்படக் கலைஞர் என்ற பெயரிலேயே இவ்வாதரவுக்கான பெயர் மாற்றம் அடைந்துள்ளது[2]

கிரிசு இலிண்டோட், யான்கல்சாவ், மாரெக் குக்குலா மற்றும் உல்ப்காங் தில்மான்சு ஆகியோரின் பெயர்கள் 2016 ஆம் ஆண்டிற்கான போட்டியின் நடுவர் பெயர்பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளது[4][5]

ஒட்டுமொத்த வெற்றியாளர்[தொகு]

2015 – சாசெண்டாலென் சமவெளியின் முழுகிரகணம் – மார்ச்சு 2015 நிகழ்ந்த சூரிய கிரகணம் - உலூக் யாமெட்டின் வான் காட்சித் தோற்றம்[5]

மேற்கோள்கள்[தொகு]

.