ஆண்டனி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆண்டனி
இயக்கம்குட்டி குமார்
கதைகுட்டி குமார்
இசைசிவத்மிகா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். பாலாஜி
படத்தொகுப்புகார்த்திகேயன்
கலையகம்ஆதித்யா எண்டர்டயின்மென்ட்ஸ்
விநியோகம்மாஸ் எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு1 சூன் 2018 (2018-06-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆண்டனி (Antony) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். குட்டி குமார் எழுதி இயக்கிய இப்படத்தில் லால், நிஷாந்த், வைஷாலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2018 சூன் முதல்நாளன்று வெளியானது.

நடிகர்கள்[தொகு]

 • லால் ஜியார்ஜாக
 • நிஷாந்த் ஆண்டனியாக
 • வைசாலி மகாவாக
 • ரேகா
 • சம்பத் ராம்
 • சேரன்ராஜ்
 • வெப்பம் ராஜா
 • பில்லலா ஜெகன்
 • ராஜ்காந்த்
 • சிவா
 • ராஜ்குமார்

தயாரிப்பு[தொகு]

இந்த படம் "இந்தியாவின் முதல் மூட்ட மருட்சி அறிவியல் பரபரப்பூட்டும் திரைப்படம்" என்று வணிகம் செய்யப்பட்டது. இப்படத்தில் ஒரு மனிதன் மகிழுந்தில் சிக்கி நிலவறையில் சிக்கிக்கொள்கிறான். [1] இப்படம் பெரும்பாலும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் பாட்ஷா (1995) படத்தில் ஏற்றிருந்த எதிர் நாயக பாத்திரத்தின் பெயரான ஆண்டனி என்று பெயர் இப்படத்திற்கு இடப்பட்டது. [2]

இசை[தொகு]

படத்தின் பாடல்களுக்கான இசையை 19 வயதான அறிமுக இசையமைப்பாளர் சிவத்மிகா அமைத்தார். [3] [4] முகநூலில் தனது பணியை காட்டியதைக் கண்டு தயாரிப்பாளர் விவேக் அவரை அணுகினார். [5] [6]

படத்தின் பாடல்கள் 2018 மேயில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டன. [7]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆண்டனியின் அறிமுகம்"  சிவம் 2:05
2. "கத்ரின் காதல்"  யாசின் நசிர், சிந்தூரி விசால் 3:48
3. "பொண்ணுக்குளே"  வேல்முருகன் 3:38
4. "ஆறடி சிங்கம்"  வி. எம். மகாலிங்கம் 3:41
5. "தளராதே"  சிவம் 3:22

வெளியீடு மற்றும் வரவேற்பு[தொகு]

படம் 2018 சூன் முதல் நாளன்று வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார், இருப்பினும் "பார்வையாளர்களுக்கு ஆறுதலாக இருப்பது ஓரளவு மென்மையாய் ஒளிப்பதிவுவும், இரண்டு மறக்கமுடியாத காட்சிகளும்" என்றார். [8] இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு விமர்சகர் குறிப்பிட்டார், "நம்பிக்கைக்குரிய ஒரு படம் மோசமான எழுத்து, நடிகர்களின் மோசமான நடிப்பு மற்றும் ஒலி ஆகியவற்றால் தகுதி குறைகிறது. படத்தின் சில காட்சிகள், சுவாரஸ்யமாக இருக்கின்றன. " [9] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் க்ரோனிகல் ஆகியவற்றின் மேலதிக விமர்சனங்கள் படத்தின் கதைக்களத்தை விமர்சித்தனர். [10] [11]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டனி_(திரைப்படம்)&oldid=3120972" இருந்து மீள்விக்கப்பட்டது