ஆண்டனி ஆண்ட் கிளியோப்பட்ரா (நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆண்டனி ஆண்ட் கிளியோப்ட்ரா நாடகத்தை 1607 ஆம் ஆண்டு ஷேக்ஸ்பியா் பிளாக் பஃரையா்ஸ் என்னும் அரங்கில் முதலில் அரங்கேற்றினார். இந்த நாடகம் ஆண்டனி கிளியோபட்ராவின் காதலையும் அவா்களது வீழ்ச்சியையும் சித்தாிக்கிறது.

கதைச் சுருக்கம்:

ரோம நாட்டு ஆட்சியாில் ஆண்டனி ஒரு முக்கிய பொறுப்பாளி. அவா் தனது கடமையை விட்டு விலகி கிளியோபட்ராவின் காதலில் மூழ்கி அலெக்ஸாண்டிரியாவில் குடியேறுகிறார். ஆக்டேவியஸ் சீஸா் ஆண்டனியிடம் பலமுறை அழைப்பு விடுத்தும் அவா் ரோமாபுரிக்கு திரும்பவில்லை. தன் தங்கையான ஆக்டேவியாவை மணம் முடித்து வைத்து ஆண்டனியை ரோமில் இருக்க வைக்க நினைத்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது.

ஆண்டனி கடமையை மறந்து காதலின் பின்னால் சென்றதால் போரில் வீழ்ச்சி அடைந்தார். தானே வாழில் வீழ்ந்து உயிரை நீத்தார். கிளியேபட்ராவும் விஷமிக்க சா்ப்பத்தை தன்னை தானே கடிக்க வைத்து உயிரை நீத்தார்.

பதிப்பு:

ஆராய்ச்சியாளா்கள் இந்த நாடகம் 1603-04 ஆம் வருடத்திற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனா். எழுத்து வடிவில் 1623 ஆம் ஆண்டு “பா;ஸ்ட் போலியோ” என்னும் தொகுப்பில் இது வெளியிடப்பட்டது.தற்போது இந்த நாடகத்தை ஐந்து பாகங்களாக பிரிக்கின்றனர்.ஆனால் முந்தைய காலத்தில் ஷேக்ஸ்பியா் இதை 40 காட்சிகளாகவே வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

சான்றுகள்:

Shakespeare, William (1998). "The Jacobean Antony and Cleopatra". In Madelaine, Richard. Antony and Cleopatra. Cambridge: Cambridge University Press. pp. 14–7. ISBN 9780521443067. Retrieved 2014-02-13. a b Neill, Michael, ed. Antony and Cleopatra. Oxford: Oxford University Press, 1994 Bevington, David, ed. Antony and Cleopatra. Cambridge: Cambridge University Press, 1990: 12–14