ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
A photochromic eyeglass lens (polymer film), after exposure to sunlight with part of the lens covered by paper. Note the two levels of coloration around the dark-light interface, arising from the fact that the photochromic molecules are located in two thin films (on the front and back surfaces of the lens).

ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் (Photochromatic lens)

கண் கண்ணாடிகளில், லென்ஸ் உள்ள கண்ணாடிகளில் கூட இந்த ஆட்டோமேட்டிக் கண்ணாடிகள் மிகவும் சாதாரணமாகி விட்டன. போட்டோ க்ரோமாடிக் கிளாஸ்கள் என்ற பெயர் கொண்ட வெயிலில் நிறம் மாறும் கண்ணாடிகள் கண் கண்ணாடிகள் மட்டுமல்லாது சில கார்களின் 'சன் ரூஃப்' எனும் 'கூரைக் கண்ணாடிகளில்' கூட உபயோகப்படுத்தப்படுகிறது. இது நிறம் மாற ஒரு சில நிமிடங்களே எடுத்துக்கொண்டாலும் அந்த வேகம் போதாது என்பதாலும் கண்ணாடியின் கருமை அளவைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்த இயலாது என்பதாலும் கார்களின் பக்கக் கண்ணாடிகளில் உபயோகத்திற்கு வரவில்லை.

உருவாக்கியவர்:[தொகு]

'கார்னிங் க்ளாஸ் ஒர்க்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டான்லி ஸ்டூக்கி என்பவர் அறுபதுகளில் உருவாக்கிய கண்ணாடி செய்முறை இது. இவருடைய இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்க தேசிய தொழில்நுட்ப பதக்கம் 1986ம் ஆண்டு வழங்கப்பட்டது.

உருவாகும் விதம்:[தொகு]

கண்ணாடிக் குழம்பில் 0.01 முதல் 0.1 சதவீதம் வரை சில்வர் க்ளோரைட் சேர்க்கப்படும். சிறு அளவு காப்பர் (I) க்ளோரைடும் சேர்க்கப்படும். இது மிகச் சிறிய சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக கண்ணாடிக்குள் அமையுமாறு குளிர்விக்கப்படுகின்றன.

இந்தக் க்றிஸ்டல்கள் மிகச் சிறியதாக இருப்பதால் பார்வைக்குத் தெரியாது. அதே சமயம் குறுகிய அலைநீளமுள்ள அல்ட்ரா வயலட் கதிர்களை ஈர்த்துக் கொள்ளும்.

கருமையாகும் விதம்:[தொகு]

சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்கள் பாஸிடிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்களாலும் (Ag+) நெகடிவ் சார்ஜ் கொண்ட க்ளோரைட் அயான்களாலும் (Cl-) இணைந்தவை. புற ஊதாக் (Ultra Violet) கதிர்கள் இந்தக் க்றிஸ்டல்களைப் பிரித்து சார்ஜ் இல்லாத சில்வர் (Ag0) மற்றும் க்ளோரைட் (Cl0) அணுக்களாக மாற்றுகிறது. (போட்டோக்ராபிக் தாள்களிலும் இதே தான் நடக்கிறது).

Cl- + UV light --> Cl0 + e-

Ag+ + e- --> Ag0

சார்ஜ் இல்லாத சில்வர் அணுக்களின் இணைந்த தோற்றம் கண்ணாடியின் ஒளி ஊடுருவலைத் தடுக்காத அளவில் இருந்து கொண்டு கண்ணாடியை சாம்பல் அல்லது ப்ரௌன் நிறமாக காட்டுகிறது. லென்ஸ் கண்ணாடிகளில் மிகுந்த தூரப்பார்வை உடையவர்களுக்கு இந்த போட்டோக் கண்ணாடிகள் ஒத்து வராது. இவர்களுடைய கண்ணாடியில் லென்ஸ் நடுவில் தடிமனாக இருப்பதால் போட்டோ கண்ணாடி உபயோகித்தால் அங்கு மட்டும் மிகக் கருமையாகவும் ஒளி குறைவாக புகுமாறும் இருக்கும்.

கருமை நீங்கும் விதம்:[தொகு]

சூரிய ஒளி குறையும் போது தான் கண்ணாடியில் சிறிதளவு சேர்த்த காப்பர் (I) க்ளோரைடுக்கு வேலை. புற ஊதாக் கதிர்கள் குறையும் போது காப்பர் (I) அயான்கள் (Cu+) சார்ஜ் இல்லாத க்ளோரின் அணுக்களை க்ளோரைட் அயான்களாக மாற்றுகிறது. அதே சமயம் அதுவும் காப்பர் (II) அயான்களாக (Cu++) மாறுகிறது. இது பின்னர் சில்வர் அணுக்களை ஆக்ஸிடைஸ் செய்து சில்வர் அயான்களாக மாற்றிவிடுகிறது.

Cl0 + Cu+ --> Cl- + Cu++

Cu++ + Ag0 --> Ag+ + Cu+

பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்கள் க்ளோரைட் அயான்களுடன் கூட்டுச் சேர்ந்து பழையபடி சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக மாறுகிறது. கண்ணாடியும் கருமை நீங்கி தெளிவாகிறது.