ஆட்டுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம், முகுந்தராயபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆட்டுப்பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பது தமிழ்நாடின், வேலூர் மாவட்டம், முகுந்தராயபுரம் ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு ஆட்டுப்பண்ணையாகும். இந்தப் பண்ணையானது குறிப்பாக சென்னை சிவப்பு செம்மறியாடுகளை பாதுகாக்க செயல்பட்டுவருகிறது. இங்கு ஆடுகளுக்குத் தேவையான தீவனங்கள் வளர்ப்பதற்கான நிலங்களுடன் சேர்த்து சுமார் 340 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பண்ணை செயல்பட்டு வருகிறது. [1] இந்தப் பண்ணையில் சென்னை சிவப்பு செம்மறியாடுகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "விவசாய நிலத்துக்கு வழி கோரி ஆர்பாட்டம்". செய்தி. தினமணி (2013 பெப்ரவரி 8). பார்த்த நாள் 10 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010". கால்நடை பராமரிப்புத் துறை. பார்த்த நாள் 8 மே 2019.