ஆட்சியுடையது (மரபியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
*இரு மாற்றுருக்களில்,
B ஆட்சியுடைய மாற்றுரு,
b பின்னடைவான மாற்றுரு. *சந்ததியில் மரபணுவமைப்பு, 1 BB, 2 Bb, 1 bb *சந்ததியில் தோற்றவமைப்பு, 1 + 2 = 3 ஊதாப் பூக்கள்
1 வெள்ளைப் பூ

மரபியலில் ஆட்சியுடைது (dominance) என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய மாற்றுரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.

இரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன பூவின் நிறத்திற்குக் காரணமான மரபணுவில் உள்ள இரு மாற்றுருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான மரபணுவமைப்புக்கள் தோன்றலாம். இவற்றில் Bb என்ற இதரநுக மரபணுவமைப்பானது, BB என்ற சமநுக மரபணுவமைப்பின் இயல்பையே தனது தோற்றவமைப்பில் வெளிக்காட்டுமாயின், B மாற்றுரு, b மாற்றுருவுக்கு ஆட்சியுடையது எனலாம். இங்கே பூவில் ஊதா, வெள்ளை என்ற இரண்டே வைகையான நிறங்களைக் கொண்ட தோற்றவமைப்புக்களே உருவாகும். ஊதா நிறமானது வெள்ளை நிறத்திற்கு ஆட்சியுடைய நிறமாக உள்ளது. இந்நிலையில் b மாற்றுரு, B மாற்றுருவுக்கு பின்னடைவானது எனக் கூறுவோம்.

நடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.