ஆடு வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Idil 1300347

ஆடு வகைகள்[தொகு]

கோயம்புத்தூர் ஆடு, செங்கம் ஆடு[தொகு]

இவற்றின் ரோமம் வெகு மட்டமான கம்பளிகள் நெய்யப் பயன்படுகிறது. 

பால்கி அல்லது ஹஸ்தனகிரி ஆடு[தொகு]

இது பாகிஸ்தானைச் சேர்ந்த வடமேற்கு மாகாணத்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் உள்ளது. வாலில் கொழுப்புச் சேர்ந்து மூட்டை போலிருக்கும். ரோமத்திற்கும் இறைச்சிக்கும் ஏற்றது.

நெல்லூர் ஆடு[தொகு]

நெல்லூர், குண்டுர் மாவட்டங்களில் உள்ளது.

மண்டியா ஆடு, ஹாசன் ஆடு[தொகு]

இவை மைசூர் பீடபூமியைச் சேர்ந்தவை. ஊனுக்கு உயர் வான ஜாதிகளென்று கருதப்படுகின்றன.

மைலம்பாடி ஆடு கோவை மாவட்டத்தில் உள்ளது.

மேச்சேரி ஆடு சேலம் மாவட்டத்தில் உள்ளது.

வெள்ளாடுகள்[தொகு]

இவை பாலுக்காக அதிகமாக மதிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் ரோமத்திற்காக வளர்க்கப்படும் வெள்ளாடும் உண்டு. உலகப் புகழ்பெற்ற மொகேர்(Mohair) என்னும் துணி நெய்ய மிக மிருதுவான ரோமம் தரும் வெள்ளாட்டிற்கு அங்கோரா ஆடு என்று பெயர்.

நியூபியன் ஆடு[தொகு]

இது எகிப்தைச் சேர்ந்த நியூபியா என்னுமிடத்திலும், அபிசீனியாவிலும் காணலாம். கொம்புகள் இல்லை. கீழ்த்தாடைகள் சற்று நீண்டிருக்கும். காதுகள் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும். நிறம் சிவப்பு அல்லது கறுப்பு, பாலுக்கு ஏற்றது.

மால்ட்டா ஆடு[தொகு]

இது மால்ட்டா தீவைச் சேர்ந்தது. 2.5 அடி உயரமுள்ளது. கொம்புகளில்லை. நிறம் வெண்மை, காதுகள் நீண்டு தொங்காமல் பக்கவாட்டில் தூக்கிநிற்கும். பாலுக்கு ஏற்றது. சுவிட்ஸர்லாந்து நாட்டிலே பாலுக்குச் சிறந்த சில ஜாதி ஆடுகளிருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவை.

டாகென்பர்கு ஆடு[தொகு]

சாதாரணமாகச் சிவப்பு நிறம் உடையது. கால்களும், காதுகளும், வெண்ணிறம். முகத்திலும் தலைப்பாகத்திலும் இரண்டு வெண்ணிறமுள்ள கோடுகள் உண்டு.

சானே ஆடு[தொகு]

இவ்வகை ஆடுகளுக்கு கொம்புகளில்லை. பால் அதிகமாகக் கொடுக்கும்.

ஆல்ப்பைன் ஆடு[தொகு]

ஆல்ப்ஸ் மலைப் பிரதேசத்தைச் சேர்ந்தது. பாலுக்கு உகந்தது.

ஜம்னபாரி ஆடு[தொகு]

இது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தது ; பருத்தது. மூக்கு வில் போல் வளைந்திருக்கும் ; ஓர் அடி நீளமுள்ள, தொங்குகின்ற காதுகளுடையது. சிவப்பும் கறுப்பும் கலந்த நிறம், பாலுக்கும் ஊனுக்கும் உகந்த ஜாதி.

சூரத் ஆடு[தொகு]

இது சூரத்துப் பிரதேசத்தைச் சுற்றியுள்ளது. மட்டமானது. வெண்ணிறம் கொண்டது. கொம்பற்றது. பால் அதிகமாகக் கொடுக்கும் கடாவுக்குத் தாடியுண்டு.

===தலைச்சேரி அல்லது மலையாள ஆடு=== இது பல நாட்களாக வளர்க்கப்பட்டு வரும் கலப்பு ஜாதி ஆடு. சூரத், நியூபியன் முதலிய ஆடுகளுக்கும் உள்நாட்டு ஆடுகளுக்கும் பிறந்தது; வெண்மையும் கறுப்பும் கலந்த நிறம், நாள் ஒன்றுக்கு 1 முதல் 1.25 படி பால் கொடுக்கும்.

[1]

  1. http://www.tamilvu.org/library/libindex.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடு_வகைகள்&oldid=2748885" இலிருந்து மீள்விக்கப்பட்டது