உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதுறை - 56

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 56
ADT 56
வேளாண் பெயர்
ADT 56
(IET27920) (AD 16028)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
WGL 14377 X மதுரை - 5[1]
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்[1]
மகசூல்
6400 கிலோ எக்டேர்[1]
வெளியீடு
2021[2]
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஆடுதுறை - 56 அல்லது ஏடிடீ - 56 (ADT 56) முன்மொழிவு எண்: (IET27920),சுட்டுப்பெயர்: (AD 16028)[3] எனப்படும் இந்த நெல் வகை, வாரங்கல் -14377 (WGL 14377) மற்றும் மதுரை - 5 நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் கலப்பின நெல் இரகமாகும்.[1]

காலம்

[தொகு]

குறுகிய கால சாகுபடிக்கு உகந்ததாக உள்ள இது, 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. கார், குறுவை, நவரை மற்றும் கோடைப் போன்ற பருவங்களில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, தமிழ்நாட்டின் நீர்ப்பாசன வசதிப் பெற்ற இடங்களுக்கு ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

மகசூல்

[தொகு]

தானிய நிறமாற்றம், தண்டு துளைப்பான் மற்றும் இலை சுருக்கம் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட ஆடுதுறை - 56, ஒரு எக்டேருக்கு சராசரியாக 6400 கிலோ உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

வெளியீடு

[தொகு]

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2021 ஆம் ஆண்டு, ஆடுதுறை - 56 நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

சாகுபடி

[தொகு]

தமிழ்நாட்டின் நெல் வகையான இது, சத்தீசுகர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் (மண்டலம் V), பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சார்க்கண்டு (மண்டலம் III) ஆகிய மாநிலங்களுக்கு சாகுபடி செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.[3]


சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Season and Varieties: Rice ADT 56". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-07-01.
  2. 2.0 2.1 "Indian Rice Varietal Information". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-07-01.
  3. 3.0 3.1 "DRAFT PROCEEDINGS - Page 61" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_56&oldid=4302513" இலிருந்து மீள்விக்கப்பட்டது