ஆடுதுறை - 54
| ஆடுதுறை - 54 ADT 54 |
|---|
| வேளாண் பெயர் |
| ADT 54 (AD 09493), (IET 24249) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| வெள்ளைப் பொன்னி X பாசுமதி[1] |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 130 - 135 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6307 கிலோ எக்டேர்[1] |
| வெளியீடு |
| 2020[2] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஆடுதுறை - 54 அல்லது ஏடிடீ - 54 (ADT 54), சுட்டுப் பெயர்: (AD 09493), முன்மொழிவு எண்: (IET 24249)[2] எனப்படும் இந்த நெல் வகை, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி மற்றும் பாசுமதி நெல் இரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் கலப்பின நெல் இரகமாகும்.[1]
காலம்
[தொகு]குறுகிய மற்றும் நடுவம் கால சாகுபடிக்கு உகந்ததாக உள்ள இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. பின் சம்பா, மற்றும் தாளடிப்) பருவத்திற்காக வெளியிடப்பட்ட இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் நீர்ப்பாசன வசதிப் பெற்ற இடங்களுக்கு ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
மகசூல்
[தொகு]இதன் தானிய தரம் கிட்டத்தட்ட மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னியுடன் பொருந்தக்கூடிய,[3] மற்றும் அதிக மகசூல் தரும், நடுத்தர இரகமுமான ஆடுதுறை - 54, ஒரு எக்டேருக்கு சராசரியாக 6307 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [1]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டு, ஆடுதுறை - 54 நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
சாகுபடி
[தொகு]ஒழுங்கற்ற பருவமழை அல்லது குறிப்பிட்ட பயிர் முறைகளைக் கொண்ட பகுதிகளுக்கு ஏற்றதாக கூறப்படும் ஆடுதுறை - 54 உயர் தர தானிய தரத்திற்கு பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது .[4]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Season and Varieties: Rice ADT 54". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-06-28.
- ↑ 2.0 2.1 2.2 "Indian Rice Varietal Information". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-06-28.
- ↑ "Advisory on suitable Rice varieties in different regions of Tamil Nadu" (PDF). tnagriculture.in (ஆங்கிலம்) - © 08.02.2021. Retrieved 2025-06-28.
- ↑ "ADT 54 paddy variety information". agri.bot (ஆங்கிலம்) - © October 23, 2023. Retrieved 2025-06-28.