ஆடுதுறை - 53
| ஆடுதுறை - 53 ADT 53 |
|---|
| வேளாண் பெயர் |
| ADT 53 (AD 07073), (IET 23955) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஆடுதுறை - 53 x JGL 384[1] |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 -115 நாட்கள்[2] |
| மகசூல் |
| 9875 கிலோ எக்டேர்[3] |
| வெளியீடு |
| 2019[3] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஆடுதுறை - 53 அல்லது ஏடிடீ - 53 (ADT 53), சுட்டுப் பெயர்: (AD 07073), முன்மொழிவு எண்: (IET 23955) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 53 எனும் இதே நெல் இரகத்துடன் JGL 384 நெல் இரகத்தை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1][3]
காலம்
[தொகு]குறுகிய கால சாகுபடிக்கு உகந்ததாக உள்ள இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. குறுவை, கோடை மற்றும் நவரைப் பருவத்திற்காக வெளியிடப்பட்ட இந்த நெல் வகை, நீர்ப்பாசன வசதிப் பெற்ற இடங்களுக்கு ஏற்றதாக கூறப்படுகிறது.[2]
மகசூல்
[தொகு]அதிக மகசூல் தரும், நடுத்தர உயரமான மற்றும் நிமிர்ந்த இரகமுமான ஆடுதுறை - 53, ஒரு எக்டேருக்கு சுமார் 6334 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் ஒரு எக்டேருக்கு 9875 கிலோ அளவிற்க்கு சாத்திய மகசூல் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.[3]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டு, ஆடுதுறை - 53 நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
சாகுபடி
[தொகு]திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடையே கணிசமான ஈர்ப்பைப் பெற்ற இந்த நெல் இரகம், குறுகிய வளர்ச்சி காலம் மற்றும் நல்ல உழவுத் திறனுடன் உகந்த நில பயன்பாட்டிற்கு ஒரு விருப்பமான தேர்வாக அமைந்துள்ளது என கருதப்படுகிறது.[2] மேலும் கழிமுக மண்டலத்தில் மே மாதத்தில் விதைப்பிற்கும் மற்றும் டிசம்பர் மாதத்தில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ரபி மாதத்தில் குறுவை சாகுபடி விதைப்பிற்கும் பரிந்துரைக்கப்படுகிறது.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "RESEARCH HIGHLIGHTS 2019" (PDF). tnau.ac.in (ஆங்கிலம்) - © 2020. Retrieved 2025-06-27.
- ↑ 2.0 2.1 2.2 "ADT 53- Short duration high yielding fine grain rice variety for Kuruvai /Kodai seasons of Tamil Nadu". ejplantbreeding.org (ஆங்கிலம்) - © 2020. Retrieved 2025-06-27.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Salient features of the rice culture AD 07073 as Rice ADT 53" (PDF). www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © 2019. Retrieved 2025-06-27.
- ↑ "Advisory on suitable Rice varieties in different regions ofTamil Nadu" (PDF). tnagriculture.in (ஆங்கிலம்) - © 08.02.2021. Retrieved 2025-06-27.