ஆடுதுறை - 1 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 1
ADT 1
வேளாண் பெயர்
சிவப்பு சிறுமணி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
170 - 175 நாட்கள்
மகசூல்
3400 கிலோ எக்டேர்
வெளியீடு
1925
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 1 (ADT 1) பிரபலமாக சிவப்பு சிறுமணி (Red Sirumani) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு[தொகு]

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1925 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்[தொகு]

நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 175 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி[தொகு]

நீர்ப்பாசன வசதியுள்ள தமிழகத்தின் தஞ்சை, மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் ஆடுதுறை - 1 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்[தொகு]

  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 3400 கிலோவரை ( 3.4 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் தானியமணிகள் தடித்து குட்டையாக உள்ளது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.
  2. 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 1". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_1_(நெல்)&oldid=3715202" இலிருந்து மீள்விக்கப்பட்டது