ஆடில் அப்துல் மகதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடில் அப்துல் மகதி
عادل عبد المهدي
Adil Abdul-Mahdi portrait.jpg
ஈராக்கின் 49 ஆவது பிரதமர்
பதவியில்
25 அக்டோபர் 2018 – 1 டிசம்பர் 2019
குடியரசுத் தலைவர் பர்காம் சலீத்
துணை தமீர் காத்பான்
பாஉத் உசைன்
முன்னவர் அய்தர் அல் அபாதி
தனிநபர் தகவல்
பிறப்பு ஆடில் அப்துல் மகதி அல் முன்டாபிகி
1 சனவரி 1942 (1942-01-01) (அகவை 80)
பகுதாது, ஈராக்
அரசியல் கட்சி சுயேச்சை (2017 ஆம் ஆண்டிலிருந்து)[1]
ஈராக்கிய இசுலாமிய உயர்மட்டக் குழு (1982–2017)[2]
ஈராக்கிய பொதுவுடைமைக் கட்சி (1970களில்)[3]
வாழ்க்கை துணைவர்(கள்) Rajah
படித்த கல்வி நிறுவனங்கள் பாக்தாத் பல்கலைக்கழகம் (இளங்கலை)
போய்டியர்சு பல்கலைக்கழகம், முதுகலை, முனைவர்)

ஆடில் அப்துல் மஹ்தி அல்-முன்டாபிகி ( அரபு மொழி: عادل عبد المهدي المنتفكي , பிறப்பு 1 ஜனவரி 1942)ஒரு ஈராக் அரசியல்வாதி ஆவார். இவர் ஈராக்கின் பிரதமராக அக்டோபர் 2018 முதல் டிசம்பர் 2019 வரை பணியாற்றினார். அப்துல்-மஹ்தி ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் 2005 முதல் 2011 வரை ஈராக்கின் துணை அதிபர்களில் ஒருவராக இருந்தார். அவர் முன்னர் இடைக்கால அரசாங்கத்தில் நிதி அமைச்சராகவும், 2014 முதல் 2016 வரை எண்ணெய் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [4]

அப்துல்-மஹ்தி சக்திவாய்ந்த ஷியா கட்சியின் உச்ச இசுலாமிய ஈராக் கவுன்சில் அல்லது எஸ்.ஐ.ஐ.சி என்ற அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆவார். அண்டை நாடான ஈரானில் நீண்டகாலமாக அமைந்திருந்த இக்குழு, குர்துகள் மற்றும் ஈராக்கிய தேசிய காங்கிரசு போன்ற அமெரிக்க ஆதரவு அமைப்புகள் சதாம் உசேனை எதிர்த்த போது, அமெரிக்காவின் நிர்வாகத்தை எதிர்த்தது.

பின்னணி[தொகு]

ஈராக்கின் மன்னராட்சியில் அமைச்சராக இருந்த ஷியைட் மதகுருவின் மகனாக 1942 ஆம் ஆண்டில் பாக்தாத்தில் மகதி பிறந்தார். அவர் அமெரிக்க சேசு சபையைச் சார்ந்த மேல்நிலைப் பள்ளியான பாக்தாத் கல்லூரியில் உயர்நிலைக் கல்வியைப் பயின்றார். பிறகு, பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு 1963 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் 1965 ஆம் ஆண்டில் ஈராக் வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். ஈராக்கிய பாத் கட்சியின் தொடக்க கால ஆதரவாளராக இருந்தார், ஆனால் சித்தாந்தரீதியான கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியை விட்டு வெளியேறினார். 1969 ஆம் ஆண்டில், அவர் பிரான்சுக்குச் சென்றார், அங்கு அவர் பிரெஞ்சு சிந்தனைக் குழுக்களுக்காகப் பணியாற்றினார். பிரெஞ்சு மற்றும் அரபு மொழிகளில் பத்திரிகைகளைத் திருத்தியுள்ளார். 1972 ஆம் ஆண்டில் அவர் போய்ட்டியர்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் பொருளாதாரத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். [5]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1970 களில், அப்துல்-மஹ்தி ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினராக இருந்தார். [6] கட்சி இரண்டு தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்தது, 1958 முதல் ஈராக்கை ஆண்ட இராணுவ அரசாங்கங்களுக்கு அதிக வாய்ப்பளித்த அளித்த ஈராக்கிய பொதுவுடைமைக் கட்சியின் மத்திய தலைமையானது முற்போக்கான ஆட்சிக்கு எதிரானவை எனக்கருதப்பட்ட அனைத்து வகையான ஒத்துழைப்பையும் நிராகரித்தன. 1967 ஆம் ஆண்டில், அப்துல்-மஹ்தி ஐ.சி.பி-மத்திய தலைமைத்துவத்தில் சேர்ந்தார், 1980 களின் முற்பகுதியில் அது படிப்படியாக மறைந்து போகும் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அந்த நேரத்தில், அப்துல்-மஹ்தி ஈரானிய இஸ்லாமியக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டார், இறுதியில் இஸ்லாமியர்களுடன் ஒன்றிணைந்தார். அயதுல்லா கோமெய்னி ஈரானில் கம்யூனிஸ்டுகளையும் பிற தாராளவாத எதிர்க்கட்சிகளையும் ஒழித்தபோது. அப்துல்-மஹ்தி ஈரானுடனான தனது தொடர்பைத் தொடர்ந்தார். ஈரானியர்களுடனான ஐ.சி.பி-மத்திய தலைமைத்துவத்திற்குள் தனது குழுவை படிப்படியாக ஒன்றிணைத்தார், அவரது கடந்த கால மார்க்சிசத்தை நிராகரித்தார், அவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த கோமெய்னியின் கருத்துக்களை பிரான்சில் பரப்புவதற்கு தனது குழுவின் நேரத்தை செலவிட்டார். அவர் இறுதியில் ஈராக்கில் இஸ்லாமிய புரட்சிக்கான உயர் மட்டக் குழுவில் உறுப்பினராக்கப்பட்டார். இந்த அமைப்பானது 1982 ஆம் ஆண்டில் ஈராக்கிலிருந்து வெளியப்பற்றவர்களை மட்டும் கொண்ட, ஈரானால் தெஹ்ரானில் உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சி இராணுவப்படை ஆகும்.

2006 ஆம் ஆண்டில், இடைக்கால அரசாங்கத்தில் வெளியேறும் துணைத் தலைவரான அப்துல்-மஹ்தி, தற்போதைய இப்ராஹிம் அல்-ஜாஃபாரிக்கு எதிராக பிரதமருக்கான ஐக்கிய ஈராக் கூட்டணியின் போட்டியில் தோல்வியுற்றார். அவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Salaheddin, Sinah (3 October 2018). "Iraq tasks Shiite independent with forming new government". Associated Press. 4 October 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "عادل عبد المهدي". Al Jazeera.
  3. Doug Struck (14 February 2015). "Prospective Iraqi Premier a Man of Many Labels". Washington Post. 3 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Iraqi prime minister accepts another minister's resignation". Press TV. 2018-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. Adil Adbul Mahdi Iraq’s New Prime Minister.
  6. "Abdul-Mahdi: The man tasked with forming Iraq's new government". Rudaw. 3 October 2018. 4 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடில்_அப்துல்_மகதி&oldid=3261266" இருந்து மீள்விக்கப்பட்டது