ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு என்பது பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் என்பவர் சேலம் மரவனேரியில் உள்ள தனது வீட்டில், 2013 ஜூலை 19-ம் தேதி கொலை செய்யப்பட்டதை விசாரிக்கும் வழக்காகும்.[1] இக்கொலையைக் கண்டித்தும், தொடர்ச்சியாகத் தங்கள் நிர்வாகிகளின் படுகொலையைக் கண்டித்தும் 2013 ஜூலை 22ல் மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்திற்கு பாஜக அழைப்புவிடுத்தது.[2] இது தொடர்பாக மத்திய புலனாய்வுக் காவல்துறை வழக்கு பதிவு செய்து, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், பக்ரூதின் உள்ளிட்டோரை கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் 100 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: பக்ருதீன் உள்பட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை". விகடன். பார்த்த நாள் மார்ச், 6, 2018.
  2. "Special police teams formed to trace Tamil Nadu general secretary's assailants". firstpost. பார்த்த நாள் மார்ச், 6, 2018.
  3. "ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகை: சேலம் நீதிமன்றத்தில் தாக்கல்". தமிழ் இந்து. பார்த்த நாள் மார்ச், 6, 2018.