ஆடாதோடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடாதோடை
Justicia adhatoda 1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
Angiosperms
வகுப்பு: இருவித்திலைத் தாவரம்
வரிசை: Lamiales
குடும்பம்: முண்மூலிகைக் குடும்பம்
Acanthaceae
பேரினம்: Justicia
இனம்: J. adhatoda
இருசொற் பெயரீடு
Justicia adhatoda
L.

ஆடாதோடை (About this soundஒலிப்பு ) அல்லது ஆடாதொடை, வாசை ( (தாவர வகைப்பாடு : Adhatoda zeylanica)[1][2] என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.

பெயர்க் காரணம்[தொகு]

இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனப்படுகிறது.[3]

விளக்கம்[தொகு]

இந்தத் தாவரம் முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். இது கைப்பு சுவை கொண்டது. இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது எனக் கூறப்படுகிறது.

செய்கைகள்[தொகு]

 • கோழையகற்றி
 • நுண்புழுக்கொல்லி
 • சிறுநீர் பெருக்கி
 • வலிநீக்கி

முக்கிய வேதிப்பொருள்கள்[தொகு]

 • வாசிசின்
 • வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின்
 • வைட்டமின் சி
 • கேலக்டோஸ்

இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மருத்துவ பயன்பாடுகள்[தொகு]

இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.

"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”
- (அகத்தியர் குணவாகடம்)

பயன்படுத்தும் முறைகள்[தொகு]

 • சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
 • இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க

ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

 • இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க

இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.

 • இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
 • இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்

கொடுக்க இருமல் தீரும்.

 • இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
 • ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Common Names for Malabar Nut (Justicia adhatoda)". Encyclopedia of Life. பார்த்த நாள் 3 January 2013.
 2. Aslam, Mohd; Rais, Sumbul; Alam, Masood; Pugazhendi, Arulazhagan (2013). "Adsorption of Hg(II) from Aqueous Solution Using Adulsa (Justicia adhatoda) Leaves Powder: Kinetic and Equilibrium Studies". Journal of Chemistry 2013: 1–11. doi:10.1155/2013/174807. பன்னாட்டுத் தர தொடர் எண்:2090-9063. 
 3. டாக்டர் வி. விக்ரம் குமார் (2018 ஏப்ரல் 14). "பாடாத நாவும் பாடும்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 ஏப்ரல் 2018.

வெளி இணைப்புக்கள்[தொகு]

இவற்றையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடாதோடை&oldid=2591765" இருந்து மீள்விக்கப்பட்டது