ஆடவரின் மழலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடவரின் குழந்தைகள் (Children of Men) என்பது ஒரு பித்த்தானிய-அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும்.[1][2][3][4] இது 2006ம் ஆண்டு அல்போன்சா குயூரான் என்பவரால் தயாரிக்கப்பட்டது. இதன் திரைக்கதை பி.டி ஜேம்ஸ் என்பவரது 1992 இல் எழுதப்பட்ட புதினத்தின் தழுவல் ஆகும். இப்படம்  2026 ஆம் ஆண்டு பற்றியது. 20 ஆண்டுகளாக மனிதர்களிடம் ஏற்பட்ட மலட்டுத்தன்மை சமுதாயத்தை அழிவின் விளிம்பிற்கு அழைத்து செல்கிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்டனர். ஆனால் அரசாங்கம் அகதிகள் மீது அடக்குமுறையை  திணித்தது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து தயாரித்த இப்படமானது 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-இல் இங்கிலாந்திலும், டிசம்பர் 25இல் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது. விமர்சகர்கள் அமெரிக்க கிறிஸ்மஸ் விழாவையும், இப்படத்தின் கரு பொருட்களான எதிர்பார்ப்பு, மீட்பு, மற்றும் நம்பிக்கையை ஒப்பிடுகிறார்கள். மிகக் குறைவான வெளியீடு இருந்தபோதும் மிகக் குறைவான லாபம் பெற்ற போதும் இப்படம் விமர்சனப் பாராட்டை பெற்றது. ஒளிப்பதிவு, திரைக்கதை,கலை  திசையியல் மற்றும் புதுமையுடன் படைத்த ஒரே முறையில் படமாக்கப்பட்ட தொடர்கள் மூலம் பாராட்டும் பெற்றது. சிறந்த திரைக்கதை, சிறந்த செயல் மற்றும் சிறந்த படத் தொகுப்பு ஆகியவற்றுக்கு  மூன்று அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இது பிஏஎப்டிஏ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிறந்த கலைத்திசையியல், சிறந்த படத்தொகுப்பு உற்பத்தி வடிவமைப்பு மற்றும் மூன்று விருதுகளையும் சிறந்த அறிவியல் புனைகதை விருதுகளையும் பெற்றது.

கருப்பொருள்கள்[தொகு]

எதிர்பார்ப்பு மற்றும் உண்மை[தொகு]

ஆடவரின் குழந்தைகள் என்னும் கதைக்கரு பொங்கி வழியும் விரக்தி மற்றும் பயனின்மைக்கு நடுவில் தோன்றும் எதிர்பார்ப்பையும் உண்மையையும் வெளிப்படுத்துகிறது. இப்படத்தின் மூலமாக கருதப்படும் பி. டி ஜேம்ஸ் அவர்களின் புதினம் தி சில்ரன் ஆப் மென்(1992) இனப்பெருக்கம் மனித ஆண் இனத்தில் இல்லாது போனால் என்னவாகும் என்பதை எடுத்துரைக்கிறது. மேலும் நமது எதிர்பார்ப்புகள் அனைத்தும் எதிர்கால சந்ததியை நோக்கி அமைந்துள்ளது என்பதையும் கூறுகிறது .இக்கதையின் ஆசிரியர் ஜேம்ஸ் எழுதும் பொழுது ”உண்மையில் போராட்டங்கள், கஷ்டங்கள் உயிரை இழத்தல் என்பதெல்லாம் கூட கருணையுள்ள சமுதாயம் கிடைக்கும் என்றால் நியாயமானதே” என்கிறார். ஆனால் ”நேர்மை கருணை, சமுதாயம், போராட்டம் தீமை போன்ற வார்த்தைகள் கேட்கப்படாத எதிரொலியாகவே இருக்கும்போது போராட்டத்தால் பயனில்லை” என்கிறார்.[5][6]

நடை மற்றும் வடிவமைப்பு[தொகு]

பெரும்பாலான அறிவியல் புனைக்கதைகளில் சிறப்பு விளைவுகளே கதைக்கு வலு சேர்க்கின்றன இக்கதையில் அவை முதன்மை பெற்று இருக்கின்றன.காலின் குவாரென் ஸ்டார் டிரிபியூன் இதை   வெளிப்படுத்துகிறது. விளம்பர பலகைகள் சம கால தோற்றத்தையும் எதிர்கால உலகத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்படுகின்றன .புதிதாக உருவாக்கப்படும் கார்கள் தோற்றத்தில் புதியதாகவும் ,இதற்கு முன் அறிந்திராத வகைகளிலும் உருவாக்கப்படுகின்றன. குவாரென்  இப்படம்  பற்றி கூறும்போது இது தொய்வில்லாத படம் என்கிறார் இதன் தயாரிப்பாளர் சமகாலத்தைய இப்படத்தில் அதிகம் எதிரொலிக்கின்றார் .[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Children of Men (2006) - Alfonso Cuarón". AllMovie.
  2. "AFI Catalog - Children of Men". American Film Institute.
  3. "Children of Men". தி கார்டியன். 22 September 2006.
  4. "Children of Men". George Eastman Museum. Archived from the original on 17 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.
  5. Bowman, James (2007). "Our Childless Dystopia". The New Atlantis (Ethics and Public Policy Center) (15): 107–110 இம் மூலத்தில் இருந்து 26 May 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070526121608/http://www.thenewatlantis.com/archive/15/bowman.htm. பார்த்த நாள்: 25 May 2007. 
  6. Guerrasio, Jason (22 December 2006). "A New Humanity". Filmmaker Magazine. http://www.filmmakermagazine.com/archives/online_features/hopeless_future.php. பார்த்த நாள்: 23 January 2007. 
  7. Briggs, Caroline (20 September 2006). "Movie imagines world gone wrong". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/entertainment/5357470.stm. பார்த்த நாள்: 8 February 2007. 
  8. Horn, John (19 December 2006). "There's no place like hell for the holidays". Los Angeles Times. http://articles.latimes.com/2006/dec/19/entertainment/et-children19. பார்த்த நாள்: 8 February 2007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடவரின்_மழலைகள்&oldid=3691029" இலிருந்து மீள்விக்கப்பட்டது