ஆடம்சைட்டு-(Y)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடம்சைட்டு-(Y)
கனடாவில் கிடைத்த ஆடம்சைட்டு கனிமத்தின் பட்டகத்தன்மையான வெண் படிகங்கள்.
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுNaY(CO3)2•6H2O
இனங்காணல்
படிக அமைப்புமுச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை3.0

ஆடம்சைட்டு-(Y) (Adamsite-(Y)) என்பது NaY(CO3)2•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். முன்னதாக இக்கனிமத்தின் அனைத்துலக கனிமவியல் சங்கத்தின் குறியீடு ஐ.எம்.ஏ. 1999-020 என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. சோடியம், இட்ரியம், கார்பன், ஆக்சிசன் மற்றும் ஐதரசன் ஆகிய தனிமங்களின் கனிமமாக ஆடம்சைட்டு அறியப்படுகிறது. மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவியல் பேராசிரியர் பிராங் தாவ்சன் ஆடம்சு (1859-1942) கண்டுபிடித்த காரணத்தால் ஆடம்சைட்டு என்ற பெயர் கனிமத்திற்குச் சூட்டப்பட்டது. இக்கனிமத்தின் மோவின் அளவுகோல் கடினத்தன்மை மதிப்பு 3 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்சைட்டு-(Y)&oldid=3592886" இலிருந்து மீள்விக்கப்பட்டது