ஆடகசௌந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடகசெளந்தரி இலங்கையை ஆண்ட மனுநேய கயவாகு மன்னனின் வளர்ப்பு மகளாக அறியப்படுகின்றாள். இவள் குளக்கோட்டு மன்னனைத் திருமணம் செய்து கொண்டாள் என்றும் அறியப்படுகின்றது. எனினும் இவளது வரலாறு கலிங்கத் தேசத்தோடு தொடர்புப் படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கலிங்கத் தேசத்தில் அசோக மாநகரத்தை ஆண்ட அசோகசுந்தரன் என்பவனுக்கும், அவன் மனைவி மனோன்மணி சுந்தரியாள் என்பவளுக்கும் மகளாகப் பிறந்த பெண் குழந்தை, சீவிமுடித்த குழலோடும், குறையாத பற்களோடும் இருந்ததால், சோதிடர்களின் கூற்றுப்படி அக் குழந்தை கலிங்கத் தேசத்தில் இருந்தால், பகையரசர்களால் ஆபத்து நேரிடும் என்றும், இக் குழந்தை பாரத தேசத்தையே ஆளுகை செய்யும் என்றும் கூறியதால், பேழை ஒன்றில் வைத்துக் கடலில் விடவும், அது இலங்கைச் சமுத்திரக் கரையை அடைய கயவாகு மன்னனிடம் போய்ச் சேர்ந்தது என்று கூறுவர்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வே.அகிலேசபிள்ளை. (1950). திருக்கோணாசல வைபவம் (பக். 32). திருக்கோணமலை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடகசௌந்தரி&oldid=2712599" இலிருந்து மீள்விக்கப்பட்டது