ஆச்சார்ய விசுவ பந்து
ஆச்சார்ய விசுவ பந்து | |
|---|---|
| பிறப்பு | 1897 இந்தியா |
| இறப்பு | 1973 |
| பணி | வேத அறிஞர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் |
| அறியப்படுவது | வேத ஆய்வுகள் |
| விருதுகள் | பத்ம பூசண் |
ஆச்சார்ய விசுவ பந்து (Acharya Vishva Bandhu) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வேத அறிஞராவார். எழுத்தாளர், கல்வியாளர் என்று பன்முகங்களுடன் அறியப்படுகிறார். தயானந்தா ஆங்கில-வேத பள்ளி மற்றும் கல்லூரி அறக்கட்டளை மேலாண்மை சங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனமான தயானந்தா பிரம்ம மகாவித்யாலயாவின் முதல்வராகவும் இருந்தார்..[1] 1903 ஆம் ஆண்டில் துறவிகளான விசுவேசுவரானந்த் மற்றும் நித்யானந்த் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்திய நிறுவனமான விசுவேசுவரானந்த் விசுவபந்து சமசுகிருதம் மற்றும் இந்தியவியல் ஆய்வு நிறுவனத்தில், ஆச்சார்யா விசுவ பந்து இயக்குநராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் அதை வளர்ப்பதில் ஆற்றிய பங்களிப்புக்காகவும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.[2] மேலும் சண்டிகரில் உள்ள தயானந்தா ஆங்கில-வேத பள்ளி மற்றும் கல்லூரியின் இலால் சந்த் ஆராய்ச்சி நூலகத்தை நிறுவிடவும் இவர் பங்களி்த்தார்.[3] வேதங்களின் உரை-மொழியியல் அம்சங்களைக் கையளும் இரண்டு ஆய்வு நூல்களான வேத உரை- மொழியியல் ஆய்வுகள் மற்றும் ஒரு வேத வார்த்தை ஒத்திசைவு ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தார். இந்திய கல்விக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 1968 ஆம் ஆண்டில் இந்திய அரசு நாட்டின் மூன்றாவது உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதை வழங்கிச் சிறப்பித்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Vishveshvaranand Vishwa Bandhu Institute of Sanskrit and Indological Studies". Vishveshvaranand Vishwa Bandhu Institute of Sanskrit and Indological Studies. 2020. Retrieved 11 March 2020.
- ↑ Mahendra Kulasrestha (2006). The Golden Book of Rigveda. Lotus Press. p. 228. ISBN 9788183820103.
- ↑ "Indology Section (LalChand Research Library)". DAV College, Chandigarh. 2016. Archived from the original on 17 March 2016. Retrieved 21 March 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 3 January 2016.