ஆச்சார்யா பிரசாந்த்
ஆச்சார்யா பிரசாந்த் | |
---|---|
பிறப்பு | பிரசாந்த் திரிபாதி ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் |
பணி |
|
அமைப்பு(கள்) | பிரசாந்த் அத்வைத் அறக்கட்டளை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Karma: Why Everything You Know About It Is Wrong |
யூடியூப் தகவல் | |
ஒளிவழித்தடம் | |
செயலில் இருந்த ஆண்டுகள் | 2006–இன்றுவரை |
காணொளி வகை(கள்) | |
சந்தாதாரர்கள் | 46.7 மில்லியன் |
மொத்தப் பார்வைகள் | 2.57 பில்லியன் |
15 மே 2024 அன்று தகவமைக்கப்பட்டது | |
ஆச்சார்யா பிரசாந்த் (Acharya Prashant) என்று அழைக்கப்படும் பிரசாந்த் திரிபாதி (Prashant Tripathi) ஓர் இந்திய எழுத்தாளரும் அத்வைத ஆசானும் ஆவார்.[1] அவர் கீதையைப் பதினேழு வகைகளிலும் உபநிடதங்களை அறுபது வகைகளிலும் கற்பிக்கிறார்.[2] மேலும் அவர் பிரசாந்த் அத்வைத் அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கும் ஒரு இலாபநோக்கற்ற அமைப்பின் நிறுவனரும்[3] நனிசைவ ஆர்வலரும் ஆவார்.[4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பிரசாந்த் திரிபாதி ஐஐடி டெல்லியில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிலகாலம் இந்தியக் குடியியல் பணிகளில் பணிபுரிந்த பின்னர், பிரசாந்த் திரிபாதி வேதாந்த ஆசானாகவும் எழுத்தாளராகவும் மாறினார்.[5]
வரவேற்பு
[தொகு]ஆச்சார்யா பிரசாந்தின் கர்மா: வொய் எவரிதிங் யு நோ எபவுட் இட் இஸ் ராங் ("கர்மா: அதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த அனைத்தும் ஏன் தவறானவை") என்ற நூலைப் பற்றிய தனது மதிப்பாய்வில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு "இந்நூல் உபநிடதங்களின் போதனைகளின் இரகசியங்களை சமகால நோக்குடன் எளிதில் தொடர்புபடுத்தக்கூடிய விதத்தில் முன்வைத்தாலும் இதில் கையாளப்பட்டுள்ள அத்வைத்த வேதாந்த சொல்லாக்கங்கள் சாமானிய மனிதரின் புரிதலுக்கு சற்றே கடினமாக உள்ளது" என்று குறிப்பிட்டது.[6] இந்நூலில் காணப்படும் கர்மாவின் நான்கு பிரிவுகளும் ஒரு ஆன்மீகத் தேடலுள்ளவரின் வாழ்க்கையின் நான்கு நிலைகளைப் பிரதிபலிப்பதாய் உள்ளன என்றும், "பிரபல நூலாசிரியர்கள் தங்களது சுயமுன்னேற்ற நூல்களை மறுசீறமைத்து மறுவெளியீடு செய்வது போலல்லாமல் உள்ளது" என்றும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறியது.[7] கர்மாவைப் பற்றிய தனது கருத்தை உறுதிபடுத்தும் வண்ணம் இதன் ஆசிரியர் வேதங்கள், பகவத்கீதை, ராமசரிதமானஸ் போன்ற ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார் என்று தைனிக் பாஸ்கர் நாளேடு சுட்டியது.[8] கர்மாவைப் பற்றி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்த சிறு மதிப்பாய்வு ஒன்று "வாசகர்கள் தங்களது கர்மாவைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது" என்று குறிப்பிட்டது.[9] ஆகஸ்ட் 2021-ல் இந்நூல் நீல்சன் புக்ஸ்கானின் சிறந்த விற்பனை நூல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.[7] மேலும் அக்டோபர் 2021-ல் தி ஏசியன் ஏஜ் வெளியிட்ட சிறந்த விற்பனை நூல்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தது.[10]
ஆச்சார்யா பிரசாந்தின் சம்பந்த் என்ற நூலைப் பற்றிய மதிப்புரையில் தைனிக் ஜாக்ரண் நாளேடு "அன்றாட பேச்சுவழக்கில் எழுதப்பட்டிருப்பதும் எளிதாகப் புரியும்படியான எடுத்துக்காட்டுகளைக் கொண்டதுமாக இருப்பதுமே இப்புத்தகத்தின் சிறப்பம்சம். இருப்பினும் ஆசிரியரது சிந்தனைகளின் வேகத்திற்கும் எழுத்துக்களின் வேகத்திற்கும் ஈடுகொடுப்பது சற்றே கடினமாக உள்ளது" என்று கூறியது.[11] சம்பந்த் நூலை பஞ்சாப் கேசரி நாளேடு "மனித உறவுகளுக்கான கண்ணாடி" என்றும் மேலும் இப்புத்தகத்தின் அமைப்பு மேலும் சீர்த்திருத்தப்பட வேண்டியது என்றும் எடுத்துரைத்தது.[12]
விமர்சனம்
[தொகு]தி நார்த் ஈஸ்ட் டைம்ஸ் நாளிதழில் நியூ லைட் ஆன் ஏன்ஷியன்ட் டெக்ஸ்ட்ஸ்: இல்யூமினேஷன் ஆர் நெப்யூலேஷன் என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரையில், ஆச்சார்யா பிரசாந்த் மறுபிறவி (புனர்ஜன்மா), ஞானம் (மோட்சம்), விடுபடுதல் (முக்தி), செயல் (கர்மா) போன்ற சில இந்துசார் கருத்துகளைப் பற்றிய அவரது விளக்கத்திற்காக விமர்சிக்கப்பட்டார். பொது இந்துத்துவ அடையாளமாக விளங்கும் இந்துசார் கருத்துக்களுக்கு பண்டைய அறிஞர்கள் தந்த விளக்கங்களோடு ஆச்சார்யா பிரசாந்த் கொடுத்த விளக்கங்கள் முரண்படுவதாக கூறப்பட்டது. "ஆச்சார்யா பிரசாந்தால் வெளிப்படையாகவும் வலுவாகவும் மறுக்கப்பட்ட பல நன்கு அறியப்பட்ட அறிஞர்களின் விளக்கங்கள் அவரால் அடிப்படையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை என்பது நம்புவதுதற்குக் கடினமான ஒன்று" என்று சுபம் அஹுஜா தனது கட்டுரையின் முடிவில் கூறுகிறார்.[13]
எழுத்துப் படைப்புகள்
[தொகு]எண். | பெயர் | பதிப்பகத்தார் | ஆண்டு | ISBN எண் |
---|---|---|---|---|
1 | Karma : Why Everything You Know About It Is Wrong | பென்குவின் ராண்டம் ஹவுஸ் | 2021 | 9780143453314[14] |
2 | Ananda : Happiness Without Reason | ஹார்ப்பர் காலின்ஸ் | 2022 | 978-9356292192[15] |
3 | Maya : I Bow to Thee, You Cannot be Overcome | ஜய்கோ | 2022 | 978-9393559418[16] |
மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ "सिविल की नौकरी छोड़ आचार्य प्रशांत बने कर्मयोगी, युवाओं में जगा रहे अध्यात्म की अलख". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ "Reviving Vedanta, this Acharya teaches 17 different Gitas". News24 English. 2021-04-01. Archived from the original on 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
- ↑ "प्रशांत अद्वैत फाउंडेशन के संस्थापक पहुंचे मैक्लोडगंज". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
- ↑ "वैश्विक महामारियों का मुख्य कारण मांसाहार को लेकर हमारी चुप्पी, वीगनिज्म के असली मायने सीखना अभी बाकी". Dainik Bhaskar (In Hindi). 2020-07-17.
- ↑ "This guru has been to IIT and IIM but wants to connect with his students spiritually". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
- ↑ Times of India (2021), TOI review, பார்க்கப்பட்ட நாள் 2022-01-09
- ↑ 7.0 7.1 "Book Review | Courses and discourses – Acharya's new book is another look at Karma". The Financial Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
- ↑ "Clipping of Dainik Bhaskar Jabalpur Nagpur Group - जबलपुर मधुरिमा". epaper.bhaskarhindi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
- ↑ "Micro review: 'Karma: Why Everything You Know About It Is Wrong' by Acharya Prashant - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
- ↑ Asian Age Bestsellers, 2021-10-10, பார்க்கப்பட்ட நாள் 2022-01-09
- ↑ "ज़िम्मेदारी, संवेदनशीलता और स्त्रीवाद के बारे में बात करती है सम्बन्ध". m.jagran.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
- ↑ "मानव सम्बन्धों को आईना दिखाती सम्बन्ध, मिल सकते हैं इन प्रश्नों के उत्तर". punjabkesari. 2022-02-02. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
- ↑ newlightonvedictexts, பார்க்கப்பட்ட நாள் 2021-08-10
- ↑ "Karma". Penguin Random House India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
- ↑ "Buy Ananda: Happiness Without Reason Online By Acharya Prashant - HarperCollins India". HarperCollins Publishers India Books, Novels, Authors and Reviews. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
- ↑ "Buy Maya: I Bow to Thee, You Cannot be Overcome by Acharya Prashant online". Jaico Publishing House (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.