ஆச்கால்
| வகை | நாளிதழ் |
|---|---|
| உரிமையாளர்(கள்) | ஆச்கால் பிரைவேட் லிமிடெட் |
| வெளியீட்டாளர் | ஆச்கால் பிரைவேட் லிமிடெட் |
| ஆசிரியர் | அசோக் தேசுகுப்தா |
| மொழி | வங்காள மொழி |
| தலைமையகம் | கொல்கத்தா, India |
| இணையத்தளம் | www |
ஆச்கால் (Aajkaal) என்பது இந்தியாவில் அமைந்துள்ள கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் முதன்மையான பெங்காலி செய்தித்தாள்களில் ஒன்றாகும். இந்த செய்தித்தாள் கொல்கத்தா மற்றும் உலகத்திலுள்ள முக்கிய வணிகம், பொழுதுபோக்கு, அரசியல் போன்ற செய்திகளை வெளியிடுகின்றது.[1] மேலும் அரசியல் நடுநிலைமை, அத்துடன் "வலுவான கோட்பாடுகள் மற்றும் நம்பகமான செய்தியிடல்" ஆகியவற்றிற்காக இது நற்பெயரைப் பெற்றுள்ளது.[2][1] இச்செய்தித்தாள் 1981-ஆம் ஆண்டில் அபிக் குமார் கோசு என்பவரால் தொடங்கப்பட்டது. இது 'சந்தியா ஆச்கால்' என்ற மாலைப் பதிப்பையும், இணையப் பதிப்பையும் கொண்டுள்ளது.[3][4][2][1] மேலும், சிலிகுரி மற்றும் திரிபுரா மாநிலத்தின் அகர்தலா ஆகிய இடங்களிலிருந்தும் 'ஆச்கால்' பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வரலாறு
[தொகு]1981-ஆம் ஆண்டில் இப்பத்திரிகையைத் தொடங்க அபிக் குமார் கோசு என்பவர் உதவினார். அக்காலகட்டத்தில் இதன் முதன்மை ஆசிரியராக இருந்த கௌர் கிசோர் கோசு, ஓர் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரும் சோசலிசவாதியும் ஆவார். இவர் இப்பத்திரிகையை மக்களிடையே பிரபலமாக்கவும், அதற்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் பெரிதும் உதவினார்.[2] தற்போது இதன் முதன்மை ஆசிரியராகப் அசோக் தாசுகுப்தா என்பவர் பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் ஒரு புகழ்பெற்ற விளையாட்டுப் பத்திரிகையாளர் ஆவார்.[2]
2021 ஆம் ஆண்டு, மே மாதத்தில், ஆச்கல் நாளிதழின் திரிபுரா கிளைச் செய்தியாளரான சமீர் தார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 2018-ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய தாக்குதல் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். "மோட்டார் சைக்கிள்களில் வந்த, அப்பகுதியில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் சில சமூக விரோதிகள், கூர்மையான ஆயுதங்களை ஏந்தி இத்தாக்குதலை நடத்தினர். இவர்கள் இந்த மூத்த பத்திரிகையாளரை நோக்கி ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்தினர்," என்று பத்திரிகையாளர்கள் பேரவை தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த பேரவை வலியுறுத்தியது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "The AajKaal Epaper". Epaper.hub. Retrieved 20 December 2022.
- 1 2 3 4 "Ajkal Tripura". Tamakura Digital Library. Archived from the original on 19 December 2022. Retrieved 20 December 2022.
- ↑ North East India History Association. Session (1985). Proceedings of North East India History Association. The Association. p. 345.
- ↑ "List of newspapers categorized by the state Government as per advertisement guidelines – 2009". Department of Information, Cultural Affairs and Tourism, Government of Tripura. 13 June 2012. Archived from the original on 19 March 2013. Retrieved 10 August 2012.
- ↑ Panday, Chandan (31 May 2021). "'Aajkaal' correspondent 'attacked' in Tripura; journalists' forum condemns act". eastmojo.com. https://www.eastmojo.com/tripura/2021/05/31/aajkaal-correspondent-attacked-in-tripura-journalists-forum-condemns-act/. பார்த்த நாள்: 20 December 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் (in வங்காளம்)
- Aajkal Tripura website (in வங்காளம்)