உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசுடெனின் பழுப்பு இருவாய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசுடெனின் பழுப்பு இருவாச்சி
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அனோரினசு
இனம்:
அ. ஆசுடெனி
இருசொற் பெயரீடு
அனோரினசு ஆசுடெனி
ஜெர்டன், 1855
வேறு பெயர்கள்

அனோரினசு திகெல்லீ ஆசுடெனி

ஆசுடெனின் பழுப்பு இருவாய்ச்சி (Austen's brown hornbill)(அனோரினசு ஆசுடெனி) என்பது வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கே வியட்நாமிலிருந்து வடக்கில் தாய்லாந்து வரையிலான காடுகளில் காணப்படும் இருவாய்ச்சி சிற்றினம் ஆகும். இது சில சமயங்களில் திக்கலின் பழுப்பு இருவாய்ச்சியின் துணையினமாகக் கருதப்படுகிறது.

விளக்கம்

[தொகு]
ஆசுடெனின் பழுப்பு இருவாய்ச்சி (ஆண், வெள்ளை கன்னங்கள் மற்றும் தொண்டையுடன்)

ஆசுடெனின் பழுப்பு இருவாய்ச்சி நடுத்தர அளவிலான இருவாய்ச்சிப் பறவையாகும். பழுப்பு நிற வாலின் முனை வெண்மையாகக் காணப்படும். ஆணின் கன்னங்கள் மற்றும் தொண்டை வெள்ளை நிறத்துடனும், வெளிர் நுரை அலகும், செம்பழுப்பு கீழ்ப் பகுதிகளுடன் காணப்படும். பெண் பறவை இருண்ட தலையும் தொண்டையும் கொண்டது. இது தாழ்வான சமவெளிகளிலிருந்து மலைகளில் பைன் மற்றும் ஓக் காடுகளின் விளிம்பு வரை இலையுதிர் மற்றும் பசுமையான காடுகளில் வாழ்கிறது. இது பழங்கள் மற்றும் சிறிய விலங்குகளை உண்ணுகிறது. இதன் உணவில் பல வகையான பழங்கள், பல கணுக்காலிகள், வெளவால்கள், பாம்புகள், பல்லிகள், நத்தைகள், மண்புழுக்கள் மற்றும் பிற பறவைகளின் குஞ்சுகள் மற்றும் முட்டைகள் அடங்கும். இது 2 முதல் 15 பறவைகள் கொண்ட குழுக்களாகக் காணப்படும்.

ஆசுடெனின் பழுப்பு இருவாய்ச்சி ஒரு கூட்டாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது. ஆதிக்கம் செலுத்தக்கூடிய இனப்பெருக்க இணையில் ஆண் உதவிப் பறவையும் கூடுதல் பெண் பறவையும் காணப்படும்.[3][4] இவை இயற்கையாகக் காணப்படும் பொந்துகளில் அல்லது பெரிய மரங்களில் காணப்படும் மரங்கொத்தியின் பழைய கூடுகளில் கூடு கட்டுகின்றன. இந்தியாவில், அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லங் மாவட்டத்தில் உள்ள நம்தாபா தேசிய பூங்கா இந்த சிற்றினத்தைப் பார்க்கச் சிறந்த இடம்.

இந்தப் பறவையின் சிற்றினப் பெயர் இயற்கையியலாளர் என்றி கேவர்சாம் காட்வின்-ஆசுடெனின் நினைவாக இடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Anorrhinus austeni". IUCN Red List of Threatened Species 2018: e.T22731941A131871758. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22731941A131871758.en. https://www.iucnredlist.org/species/22731941/131871758. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Witmer, Mark (1993). "Cooperative Breeding by Rufous Hornbills on Mindanao Island, Philippines". The Auk 110 (4): 933–936. doi:10.2307/4088652. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v110n04/p0933-p0936.pdf. 
  4. Aparajita Datta (2009). "Observations on Rufous-necked Aceros nipalensis and Austen's Brown Anorrhinus austeni Hornbills in Arunachal Pradesh: natural history, conservation status and Threats". Indian Birds 5 (4): 108–117. http://indianbirds.in/pdfs/IB.5.4_108-117.pdf.